ராஜபக்ச சகாப்தம் முடிவுக்கு வருவதற்கு, ஆளும் கட்சிக்குள் ஏற்படும் மோதல் காரணமாகுமா?

ளும்கட்சிக்குள் நிலவிவரும் முரண்பாடுகள் நாளுக்குநாள்உக்கிரமடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள்சுதந்திரககூட்டமைப்பில்அங்கம்வகிக்கும்கட்சிகளுக்குஇடையிலானபிளவு அதிகரித்தள்ளது.

இடதுசாரி கட்சிகள் ஒரு நிலைப்பாட்டையும், தேசிவாதம் பற்றிய கடும்போக்குடைய கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் பிறிதொரு நிலைப்பாட்டையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றுமொரு விதமான நிலைப்பாட்டையும் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் எடுக்கப்படும் தீர்மானங்களை நேரடியாக அல்லது பகிரங்கமாக விமர்சனம் செய்யும் அளவிற்கு இந்த முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளன.

கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டுமெனவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான அழுத்தங்களை தவிர்க்க வேண்டுமெனவும் கோரி வருகின்றன. இது தொடர்பில் கட்சிகளின் சிரேஸ்ட தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ.குணசேகர மற்றும் திஸ்ஸ வித்தாரண ஆகியோர் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதேவேளை, தேசியவாத கடும்போக்குடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் ஜாதிக ஹெல உறுமய ,ஜே.என்.பி, மஹஜன கட்சி போன்ற கட்சிகள் பிறிதொரு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டுமெனவும், வெளிநாட்டு நிபுணர்குழுவினரின் தலையீடு அவசியமற்றது எனவும் கோரி வருகின்றனர். போதைப் பொருள் வர்த்தகம், கசினோ சூதாட்டம் போன்றன தொடர்பிலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, அதுரலிய ரதன தேரர் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். 12 அம்சக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளத் தவறியதாகத் தெரிவித்து ஜே.என்.பி கட்சி இம்முறை ஊவா மாகாணசபைத் தேர்தல்களில் தனித்து போட்டியிடவும் தீர்மானித்துள்ளது. முஸ்லிம் கடும்போக்குவாதத்தை இல்லாதொழிக்க வேண்டுமெனவும் சிங்கள பௌத்தகொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் கோரி வருகின்றனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சில தீர்மானங்களுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். கசினோ சூதாட்டம் போன்ற திட்டங்களுக்கு சிரேஸ்ட உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

மாற்று அரசியல் சக்தியொன்றை உருவாக்குவது குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக அண்மையில் ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் பின்னணியில் அடுத்த ஆண்டு அரசாங்கம் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. WN
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :