கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிபின் உறுப்பினர் வெற்றிடத்திற்கே ஏ.எல்.அப்துல் மஜீத் உறுப்பினராக தெரிவு செயயப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்த மஜீத் கடந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்தபோதிலும் கடைசி நேரத்தில் ஏ.எம்.ஜெமீலுக்காக விட்டுக்கொடுத்தவர்.
அம்பாரை மாவட்டத்தின் கட்சிப்போராளிகள் முழக்கம் மஜீதுக்காக வாக்களிப்பதற்கு மிக ஆர்வமாக இருந்தனர். இறுதியில் சில சதிகாரா்களின் சூழ்ச்சியினால் கட்சித் தலைவரின் வேண்டுகோளின்படி ஜெமிலுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியேற்பட்டது. அதன் காரணமாக மாகாண சபை உறுப்பினராகும் வாய்ப்பும் இல்லாமல் போனது.
இவ்வாறான நிலையில் அப்துல் மஜீதுக்கு மாநகர சபை உறுப்பினர் பதவியும், பிரதி முதல்வர் பதவியும் வழங்க கட்சி எடுத்த தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய கல்முனை மாநகர சபையின் உறுப்பினராக அடுத்த இடத்தில் இருக்கும் முன்னாள் உறுப்பினர் தெளபீக் அவர்களுக்கும் கட்சி நன்றி கூறுவதுடன் மஜீதுக்கு பிரதி முதல்வர் பதவி வழங்க தனது பிரதி முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ள பிரதெளஷ் ஆகியோருக்கும் சபையின் கட்சி உருப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் செயலாளர் ஹஸன் அலி இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment