சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் ”இனவாதத்தை புகுத்தாதே” என்ற கோஷத்தை எழுப்பி ஆர்ப்பாட்டம்


ப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த தமிழ் மாணவனொருவன் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வியாழக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


இதன் போது, இனவாதத்தை புகுத்தாதே என்ற கோஷத்தை எழுப்பிய வண்ணம் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் தங்கியிருந்த தமிழ் மாணவனொருவன் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து விசாரணைகளுக்காக பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்ட இரு தமிழ் மாணவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகின்றனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முன்னால் ஆரம்பமான மேற்படி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது கொழும்பு பதுளை பிரதான வீதியில் பபஹின்ன முச்சந்தியில் நடைபெற்றது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் பல்கலைக்கழகத்தினுள் இனவாதம் வேண்டாம் எனவும் விசாரணைகளுக்காக அழைத்துச்செல்லப்பட்ட தமிழ் மாணவர்கள் இருவரும் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கோரியே இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :