ஜும்மா தொழுகை ஆரம்பிக்கும் நேரத்தில் இனந்தெரியாத பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் அல்லது ஒரு சிலர் லைன் பள்ளிவாயல் மற்றும் கட்டுக்களை பள்ளிவாயல்களுக்கு குண்டுவைத்துள்ளதாக கூறிவிட்டு சென்றதாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை உயர்பதவி வகிக்கும் முஸ்லீம் தலைவர் ஒருவருக்கு தகவல் வழங்கப்பட்டதாக குறித்த உலமா சபை உயர்பதவி வகிக்கும் முஸ்லீம் தலைவர் முன்னால கண்டி சிட்டி ஜம்மியதுல் உலமா சபை தலைவரும் தற்போது வக்பு சபையில் அங்கத்தவராகவும் இருக்கும் பஸ்லுல் ரஹ்மான மவ்ளவி அவர்களுக்கு செய்தி வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பஸ்லுல் ரஹ்மான மவ்ளவி அவர்கள் கண்டி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு குறித்த தகவலை உடன் வழங்கியதும் பொலிஸார் குறித்த பள்ளிவாயல்களுக்கு வந்துள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கையாக பைகளுடன் பள்ளிவாயலுக்கு வந்தவர்களின் பைகள் சோதனை இடப்பட்டுள்ளன.
அல்லாஹ்வின் உதவியால் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை என்றாலும் கூட எதிர்கால பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஜும்மாவின் பின்னர் மவ்ளவி பஸ்லுல் ரஹ்மான் அவர்கள் விஷேட அறிவுருத்தல் ஒன்றினை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார்.
வரும் காலங்களில் பைகளுடன் பள்ளிவாயலுக்கு வருவதில் இருந்து முடியுமான அளவு பொதுமக்கள் தவிர்ந்து கொள்ளுமாறும் கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாயலுக்கும் சீ சீ டீ வி பொருத்துமாறும் பள்ளிவாயலின் பாதுகாப்பு குறித்து விஷேட குழுக்களை நியமித்து பள்ளிவாயலுக்கு வருபர்களை கண்கானிக்கும் படியும் விஷேட உரையொன்றில் தெரிவித்துள்ளார்

0 comments :
Post a Comment