ஜொஹன்னஸ் பேர்க் நகரிலிருந்து கொண்டுச் செல்லப்பட்ட இரண்டு ஒட்டகச் சிவிங்கிகளையும் ட்ரக் சாரதி சற்றும் சிந்திக்காமல் உயரம் குறுகிய பாலத்தின் அடியில் வேகமாக சென்றுள்ளார்.
இந்நிலையில் ஒட்டகங்களின் கண்கள் கட்டப்பட்டிருந்தன. விலங்குகளுடன் குறுகிய பாலத்தை நோக்கி ட்ரக் செல்வதை கண்ட கார் சாரதி ஒருவர், ட்ரக்கை முந்திச்சென்று சாரதியை எச்சரிக்கை செய்துள்ளார்.
எனினும் சாரதி பாலத்தை மிகவும் நெருங்கிவிட்டதால் வண்டியை நிறுத்தியும் ஒரு ஒட்டகச் சிவிங்கியின் தலை மற்றும் கழுத்து பாலத்தின் பகுதியில் இடித்து இறந்துள்ளது. இதில் எச்சரித்த நபர் தான் கண்ட காட்சியை உடனே படம்பிடித்து டுவிட்டர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை கண்டவர்கள் அந்த ட்ரக் சாரதியை மிகவும் கடுமையாக விமர்சித்துளளனர். மேலும் மிருகங்கள் பாதுகாக்கும் அமைப்புகளும் இச்செயலிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

0 comments :
Post a Comment