ஊவா மாகாணத்தில் முஸ்லிம் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே அரச திட்டத்தின் கீழ் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்திருப்பதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இருக்கும் வாக்காளர்களை ஒற்றுமையெனும் போலி நாடகத்தால் பிரிக்கும் திட்டத்தின் அடிப்படையிலேயே எதிரிகள் போன்று காட்டிக்கொண்ட அமைச்சர்கள் ஹகீமும் ரிசாதும் இணைந்து கொண்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதனை மறுத்துள்ள முஸ்லிம் காங்கிரஸ், இந்தக் கூட்டணி அரசின் திட்டத்திற்கமைய ஏற்படவில்லை மாறாக, பிரதேச மக்களின் சமூக சேவகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
கூட்டணி ஒன்றினை அமைப்பதற்காக பிரதேசத்தில் இதுவரை சிவில் அமைப்பாக இருந்த ஒரு அமைப்பு முயற்சிகளை எடுத்தது உண்மையாகவே இருக்கும் அதேவேளை இதுவரை அந்தக் கூட்டணி பற்றிய முழுமையான உத்தியோகபூர்வ தகவலையோ, தேர்வு செய்யப்படும் வேட்பாளர் எந்த அடிப்படையில் இயங்குவார், மேல் மாகாணத்தில் போன்று ஆளும்கட்சியோடு அமர்வார்களா இல்லையா? போன்ற எந்தவொரு தகவலையும் குறித்த கட்சிகளோ அல்லது தற்போது அரசியல் கட்சியாக உருவெடுத்திருக்கும் மலையக முஸ்லிம் முன்னணி என்ற அமைப்போ கூட இதுவரை வெளியிடவில்லை என்பதும் ஒரு முஸ்லிம் பிரதிநிதியை வென்றெடுக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பே இருக்கும் நிலையில் 21 பேர் குறித்த கூட்டணி சார்பில் போட்டியிடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.so

0 comments :
Post a Comment