மஹரகம பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீயினால் இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று முற்பகல் 10 மணியளவில் பரவிய தீ கோட்டே மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு, தெஹிவளை-கல்கிசை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.n1st

0 comments :
Post a Comment