எம்.வை.அமீர்-
சமூக அபிவிருத்தி ஐக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில்,2013ம்ஆண்டு தரம் 5ல் கல்முனைமாநகர எல்லைக்குள், புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தமிழ் முஸ்லிம் மாணவர்களை கௌரவிக்கும் விழா, இன்று (2014-08-09)சாய்ந்தமருது லீ மெரிடியம் வரவேற்பு மண்டபத்தில், சமூக அபிவிருத்தி ஐக்கிய ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எச்.ஜமால் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரசின் தற்போதைய கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்து கொண்டார். முஸ்லிம் லிபரல் கட்சியின் தலைவர் எம்.எம்.இஸ்மாயில் (சிரேஷ்ட கணக்காளர்) விசேட அதிதியாக கலந்து கொண்டார். அதிதிகள் வரிசையில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை,எம்.ஏ.சீ.எம்.பாயிஸ் கரீம், எம்.ஏ.சீ.எம்.சஹீர் கரீம் மற்றும் அஸ்வான் மௌலானா போன்றோர் கலந்து கொண்டனர்.
சுமார் 175 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகள் கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் கடந்த கல்விப்பொதுத்தராதர சாதாரண பிரிவில் தனிப்பட்ட பரீட்சாத்தியாக தோற்றி கல்முனை மாநகரசபை பிரதேசத்துக்குள் அதி கூடிய சித்தியைப் பெற்ற எல்.ஜெ.ஜெஸ்மின் சௌஜா என்ற மாணவி ஒருவரும் கௌரவிக்கப்பட்ட அதேவேளை விசேட தேவையுடைய பத்துப்பேரும் இங்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment