வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி'யில் கடமையாற்றி விலகிச் செல்லும் உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை





பி.எம்.எம்.ஏ.காதர்-

ல்முனை பிரதேச செயலகப் பிரிவின் மருதமுனை நற்பிட்டிமுனை வலைய 'வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி'யில் கடமையாற்றி விலகிச் செல்லும் உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை வைபவம் அண்மையில் (07-08-2014) வங்கி முகாமையாளர் எம்.எம்.முகம்மது முபீன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக் கலந்து கொண்ட கல்முனை பிரதேச செயலாளர் எம்.மங்கள விக்ரம ஆராச்சி அதிதிகளாகக் கலந்து கொண்ட அம்பாரை மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் அணுருத்த பியதாஸ, முன்னாள் சமுர்த்தி பிரதி ஆணையாளர் சுதர்சன குணவர்த்தன, மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், வங்கி முகாமையாளர் எம்.எம்.முகம்மது முபீன் ஆகியோர் விலகிச் செல்லும் உத்தியோகத்தர்களான ஏ.ஜனுபா, பி.எம்.எம்.இல்யாஸ், ஏ.எச்.பஸீலா ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர். விஷேட விருந்தினர்களாக பிரதேச செயலாளர்களான ஐ.எம்.ஹனீபா, ஏ.எல்.எம்.சலீம் மற்றும் கல்முனை பிரதேச செயலக திவிநெகும பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா திட்ட முகாமையாளர் ஏ.சி.அன்வர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் கல்முனை பிரதேச செயலக திவிநெகும உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் யு.எல். பதூத,; திவிநெகும உத்தியோகத்தர் ஏ.பி.எம்.நவாஸ் ஆகியோர் உரையாறினார்கள். 

கவிஞர் ஜீனாராஜ் (ஏ.எல்.ஐ.ஹூசையின்) விலகிச் செல்லும் உத்தியோகத்தர்களுக்கு பிரயாவிடை கவிதை பாடியதுடன் அவரது நாடகக் குவினருடன் 'விநோத வைத்தியர்'; என்ற நகைச்சுவை நாடகத்தையும் அரங்கேற்றி சபையோரை மகிழ்வித்தனர். 

குல்முனை ஆதார வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர் குமுதினி தீபச்செல்வன் விஷேட பாடகியாகக் கலந்து கொண்டு பாடல் ஒன்றைப் பாடி சபையோரை மகிழ்வித்தர். வங்கியின் பிரதி முகாமையாளர் எம்.ஏ.எம்.பைஸால் நன்றியுரையாற்றினார். உதவி முகாமையாளர் எம்.எல்.நாஸர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். 

திவிநெகும உத்தியோகத்தர்களும், சமுர்த்தி மகாசங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :