கல்முனை அல் ஹாமியா அரபுக் கலாசாலையின் புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை எதிர் வரும் சனிக்கிழமை 2014.08.16 காலை 9.00 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் நடை பெறவுள்ளதாக கல்லூரி அதிபர் மௌலவி யு.எல்.ஏ.கபூர் தெரிவித்தார் .
அல் -குர் ஆனை திருத்தமாகவும் அழகாகவும் ஓதக் கூடிய தரம் 08 இல் கல்வி கற்கின்ற ஆர்வமுள்ள உடலாரோக்கியமுள்ள மாணவர்கள் "கிதாப்" ஷரிஆப் பிரிவுக்கும் , அல் -குர் ஆனை திருத்தமாகவும் அழகாகவும் ஓதக் கூடிய தரம் 06 இல் அல்லது அதற்க்கு கீழ் கல்வி கற்கின்ற மாணவர்கள் "ஹிப்ளுள் குர் ஆன் " குர் ஆன் மனனப் பிரிவுக்கும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் .
ஷரிஆ துறையில் மௌலவிப் பட்டத்திற்கான அரபுப் பாடங்களுடன் கல்விப் பொது தராதர சாதாரண தரம், உயர்தரம் ஆகிய பொதுப் பரீட்சைகளுக்கும் அஹதியா ,தர்மாச்சாரியர் ,அல் -ஆலிம் போன்ற அரசாங்கப் பரீட்சைகளுக்கும் மாணவர்கள் தயார் படுத்தப் படுவதுடன் " கணணி" பாட நெறியும் கலாசாலையில் நடை பெற்று வருவதாகவும், நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் 2014.08.31 ஆம் திகதி கலாசாலையில் இணைத்துக் கொள்ளப் படுவார்கள் எனவும் அதிபர் மேலும் தெரிவித்தார் .
.jpg)
0 comments :
Post a Comment