ஏ.ஜி.ஏ.கபூர், அக்கரைப்பற்று-
மாணவர்கள் பாடசாலையில் கற்கின்ற காலத்தில் சேமிப்புப் பழக்கத்தை கைக்கொள்வார்களேயானால் வளர்ந்ததும் தமது உழைப்பின் முலம் பெற்றுக் கொள்ளும் வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமிப்பதற்கும் பழகுவதோடு எதிர்காலத்தில் எதிர்பாராமல் ஏற்புடுகின்ற நிதி சம்பந்தமான சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றி அதனை கொள்வதோடு வாழ்க்கையிலும் வெற்றி பெறுவார்கள் என்று மக்கள் வங்கியின் அக்கரைப்பற்றுக் கிளையின் வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நபீல் தெரிவித்தார்.
இந்த வருடம் (2014) நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு அல்-பாயிஸா மஹா வித்தியாலய மாணவ, மாணவிகளுக்கு நடாத்தப்பட்ட முன்னோடிப் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் முகமாக அக்கரைப்பற்று மக்கள் வங்கி அவர்களுக்குப் பரிசு வழங்கி பாரட்டும் நிகழ்வு அல்-பாயிஸா மஹா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (07.08.2014) நடைபெற்றது.
பாடசாலை அதிபர்; எம்.ஏ.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மக்கள் வங்கியின் வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நபீல் கலந்து கொண்டு அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்களை வழங்கிய பின் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்: மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் அதிது அக்கறையுடன் செயல்படுவதோடு, கற்கும் காலத்திலேயே சேமிப்புப் பழக்கத்தையும் கடைப்பிடித்து வரவேண்டும். அப்போதுதான வளர்ந்ததும் சேமிப்பையும் சிக்கனத்தiயும் கடைப் பிடித்து வாழ்வை வளம்படுத்தலாம். மக்கள் வங்கி பணக்கொடுக்கல் வாங்கள் நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொள்வதில்லை கல்வி, சுகாதாரம், விளையாட்டு, கலாசாரம் உள்ளிட்ட மக்கள் மேம்பாட்டு நடவடிக்கைகளிலும் பங்களிப்பு செய்து வருகின்றது.
அதுமாத்திரமல்லாது ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும்மாணவர்கள்,க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரம் கற்கும் மாணவர்களை கல்வி நடவடிக்கைகளில் ஊக்குவிக்கும் நோக்கில் பரிசில்களையும் வழங்குவதோடு, கருத்தரங்குகளையும் நடாத்தி உதவுகின்றது. அதுமட்டுமல்லாது அவர்களின் உயர் கல்விக்கும் உதவி வருகின்றது என்றார்.
அதிகூடிய புள்ளிகளைப்; பெற்ற 06 மாணவ, மாணவிகள் வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நபீல் பரிசு அதிபர் எம்.ஏ.இஸ்ஸதீன், வங்கி உள்ளக கணக்காய்வாளர் எம்.யெஹ்யா, கற்பித்த ஆசிரியர் எம்.அனஸ் ஆகியோர்களிடமிருந்து பரிசில்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
_Copy1+-+Copy.jpg)
_Copy1+-+Copy.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment