இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் நெருக்கடிகளை தோற்றுவித்து அதனை இனவாத மோதலாக மாற்றும் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டதாக கூறப்படும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இந்த மாணவர் பற்றிய தகவல்கள் அறியப்பட்டிருந்த போதிலும் பரீட்சைகள் முடியும் வரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் தனக்கு தானே காயத்தை ஏற்படுத்தி கொண்டு அதனை தாக்குதலாக காட்ட முயற்சித்துள்ளார்.
இதன் மூலமாக இனவாத மோதல் ஒன்றை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர் எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ள போதிலும் விடுதியில் தங்கியிருந்த மாணவரை வெளியில் இருந்து வந்த குண்டர்கள் சிலர் தாக்கியுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியிருந்தது.
அரசாங்கத்தின் குண்டர்களே மாணவரை தாக்கியதாகவும் விடுதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு தரப்பினரின் உதவியின்றி எவரும் பல்கலைக்கழக விடுதிகளுக்குள் பிரவேசிக்க முடியாது எனவும் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடனேயே மாணவர் தாக்கப்பட்டதாகவும் மாணவர் ஒன்றியம் கூறியிருந்தது.
அரசாங்கம் மாணவர்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி பிரச்சினைகளை வேறு பக்கம் திசை திருப்ப முயற்சித்து வருவதாகவும் ஒன்றியம் குற்றம் சுமத்தியிருந்தது
0 comments :
Post a Comment