கிழக்கில் எவ்வித மாற்றங்களும் இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது:நியதிச்சட்டத்தை வடமாகாணத்தில் மாற்றட்டுமாம்

டமாகாண சபையின் 13 வது மாதாந்தக்கூட்டத்தொடர் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (05.08.14) இடம்பெற்றிருந்தது.

வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டங்கள் (நிதி நியதிச் சட்டம், முதலமைச்சர் நியதிச்சட்டம், மற்றும் முத்திரை வரி கைமாற்றல் நியதிச்சட்டம்) தொடர்பிலான விவாதங்கள் இன்றைய அமர்வில் சூடுபிடித்திருந்தது. இந்த நியதிச் சட்டங்கள், வடமாகாண ஆளுநரின் சிபாரிசுக்கு அனுப்பியிருந்த வேளையில், மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவையில் இன்று குறிப்பிடும் போது, "நியதிச் சட்டங்கள் ஆளுநரின் சிபாரிசுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லை. இருந்தும் நல்லெண்ண அடிப்படையில் நாங்கள் அனுப்பியிருந்தோம். இருந்தும் அவர் அதில் மாற்றங்கள் செய்யக்கூறியுள்ளார். 

ஆனால், இதில் கவனிக்கக்கூடியது என்னவெனில், வடமாகாண சபை நிதி நியதிச் சட்டத்தில் உள்ளடங்கியிருந்த சரத்துக்களே கிழக்கு மாகாண நிதி நியதிச் சட்டத்திலும் உள்ளடங்கியிருந்தது. கிழக்கு மாகாணத்தில் எவ்வித மாற்றங்களும் இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், வடமாகாணத்துக்கு மட்டும் மாற்றங்கள் செய்யுமாறு கோருவது ஏற்றுக்கொள்ள முடியாது. இது பாகுபாடு காட்டுவதாக அமையும்" என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :