ஹாசிப் யாஸீன்-
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள் கௌரவிப்பும் பிரியா விடை நிகழ்வும் காரியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர் நியாஸ் எம்.அப்பாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் பிரதம அதிதியாகவும், கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன், பதில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன், களுவாச்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர் கே.ஏ.ஜப்பார்; உள்ளிட்ட காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது காரியாலய பை.எஸ் (5ளு) நடைமுறை திட்ட போட்டியின் கீழ் சுகாதார அமைச்சினது தேசிய விருதினையும், மாகாண சுகாதரா அமைச்சினது விருதினையும் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் தலைமையில் பெற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு இடமாற்றம் பெற்றுள்ள டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீனும் இதன்போது உத்தியோகத்தர்களால் நினைவுச் சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கி பிரியா விடை கொடுக்கப்பட்டது.
_Copy1.jpg)
_Copy1.jpg)

0 comments :
Post a Comment