வை.எம்.எம்.ஏ.இயக்கத்தின் அக்கரைப்பற்று கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட ஒன்று கூடல்



ஸிறாஜ் ஏ.மனீஹா-

கில இலங்கை வை.எம்.எம்.ஏ.இயக்கத்தின் அக்கரைப்பற்று கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட ஒன்று கூடலும் பாராட்டு விழாவும் அக்கரைப்பற்று கிங்ஸ் ஏசியன் சிப் ஹோட்டலில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று வை.எம்.எம்.ஏ.கிளையின் தலைவர் எம்.சீ.எம்.பழீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ இயக்கத்தின் தேசிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட எம்.ரி.எம்.தாசிம்,தெசிய பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்ட எம்.என்.எம்.நபீல்,தேசிய பொருளாளராக தெரிவு செய்யப்பட்ட எம்.எஸ்.எம்.றிஸ்னி இலங்கை காதி நீதிமன்ற நீதிபதி சட்டத்தரணி நத்வி பஹாவுத்தீன் உட்பட தேசிய உப செயலாளராக தெரிவு செய்யப்பட்ட எம்.ஐ.உதுமாலெவ்வை, திட்டப்பணிப்பாளராக தெரிவு செய்யப்பட்ட எஸ்.தஸ்தகிர், அம்பாறை மாவட்ட பணிப்பாளராக தெரிவு செய்யப்பட்ட கே.எல்.எம்.சுபையிர், இயக்கத்தின் முன்னாள் தலைவர்களான எம்.ஏ.வஹாப்,எம்.எஸ்.றஹிம் ஆகியோர் பொண்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்படனர்.

வை.எம்.எம்.ஏ.இயக்கத்தின் வளர்ச்சிக்காக உதவி புரிந்த மல்டி லக் நிறுவனத்தின் பணிப்பாளரும் சமூகசேவையாளருமான மர்ஹூம் மக்கீன் ஹாஜி மற்றும் இயக்கத்தின் அங்கத்தவர்களாக இருந்து மரணித்த உறுப்பினர்கள், காசாவில் இஸ்ரேலின் கன்மூடித்தனமான தாக்கதலுக்குள்ளாகி உயிர் நீத்த சகோதர முஸ்லிம் உறவுகளுக்காக விசேட துஆப் பிராத்தனை ஒன்றும் அங்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.இயக்கத்தின் தேசிய சபை உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள் மாவட்ட நிருவாக சபை அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :