2 நாட்களுக்கு முன்பு அவர் தனது சொந்த ஊரான மயிலாடுதுறை வந்திருந்தார். இன்று காலை அவர் டாடா இண்டிகா காரில் மயிலாடுதுறையில் இருந்து சென்னை புறப்பட்டார். காரில் அவருடைய உறவினர்கள் பிரியதர்சினி (29), ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஜயராகவன் (52) ஆகியோர் இருந்தனர். காரை விஜயராகவன் ஓட்டிவந்தார்.
அதிகாலை மரக்காணம் அருகே உள்ள செட்டிக்குப்பம் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து புதுவை நோக்கி ஒரு கார் வந்தது.
கண்இமைக்கும் நேரத்தில் இரு கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் இருகார்களும் நொறுங்கின. மயிலாடுதுறையில் இருந்து வந்த காரில் இருந்த ஆதிகுரு, பிரியதர்ஷினி, விஜயராகவன் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
சென்னையில் இருந்து வந்த காரில் புதுவை சாரத்தை சேர்ந்த முருகன் என்பவருடைய மனைவி செந்தமிழ் (37), அவருடைய மகன் சுரேஷ்குமார் (19), டிரைவர் பாக்கியராஜ் (31) ஆகியோர் இருந்தனர். அவர்களும் படுகாயம் அடைந்தார்கள். இதில் சுரேஷ்குமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். செந்தமிழ், பாக்கியராஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்ததை அறிந்ததும் மரக்காணம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்த 4 பேரின் உடல்களும் புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

0 comments :
Post a Comment