ஜனா­தி­பதி தேர்­தலில் முஸ்லிம் காங்­கிரஸ் யாருக்கு வாக்­க­ளிக்க கோரு­வது! அமைச்சர் மன்சூர்

சிறு­பான்மை மக்கள் மனதை ஜனா­தி­பதி வெல்ல வேண்டும் என்­கிறார் மாகாண அமைச்சர் மன்சூர்

விரைவில் நடை­பெ­ற­வி­ருப்­ப­தாக கூறப்­படும் ஜனா­தி­பதி தேர்­தலில், முஸ்லிம் மக்கள் தற்­போ­தைய ஜனா­தி­ப­திக்கே மீண்டும் நீங்கள் வாக்­க­ளிக்க வேண்டும் என முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மைப்­பீடம் சொல்­லக்­கூ­டிய சூழலை ஜனா­தி­பதி உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்று கிழக்கு மாகாண சுகா­தார மற்றும் சித்த வைத்­திய கூட்­டு­றவு மகளிர் விவ­கார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் கூறினார்.

அண்­மைக்­கா­ல­மாக இலங்­கையில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக மிக மோச­மான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்டு வரு­கின்­றன. பள்­ளி­வா­சல்­களை இல்­லா­தொ­ழித்தல், சேதப்­ப­டுத்தல், பாரம்­ப­ரி­ய­மான முஸ்லிம் குடி­யி­ருப்­புக்­களை சேதப்­ப­டுத்தல், அழித்தல் உயிர்­களை பலி கொள்ளல் போன்ற இன்­னோ­ரன்ன அட்­டூழி­யங்­க­ளையும் அடா­வ­டித்­த­னங்­க­ளையும் அவ்­வப்­போது தடுப்­ப­தற்கோ கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கோ அரசு சார்ந்­த­வர்கள் அக்­கறை காட்­டு­வ­தாக தெரி­ய­வில்லை. 

சிறி­ய­ள­வி­லான சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்க கூட முயற்­சிக்­க­வில்லை. அது மட்­டு­மன்றி அரசாங்க அமைச்­சர்கள் மற்றும் தலை­வர்கள் குறிப்­பாக ஜனா­தி­பதி உட்­பட இவர்கள் வெளிப்­ப­டுத்தும் கருத்­துக்கள் முஸ்­லிம்­களின் மனதை காயப்­ப­டுத்­து­வ­தா­கவே உள்­ளன. இத்­த­கை­ய­தொரு சூழலில் முஸ்லிம் மக்­களை மூன்றாம் முறை ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்ள அதே ஜனா­தி­ப­திக்கு வாக்­க­ளி­யுங்கள் என்று முஸ்லிம் காங்­கிரஸ் வேண்­டு­வது சாத்­தி­ய­மா­குமா? என்ற கேள்வி எழும்­பு­கி­றது.

வரப்­போகும் ஜனா­தி­பதி தேர்­தலில் முஸ்லிம் மக்கள் மாத்­தி­ர­மல்ல ஏனைய சிறு­பான்மை சமூ­கங்கள் மற்றும் பௌத்த மக்­க­ளி­னதும் வாக்கை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தன்­வசம் ஈர்க்க வேண்டும் என எண்­ணினால் அவர் மிக அவ­ச­ர­மாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய விட­யங்கள் பல உள்­ளன.

மீண்டும் இலங்­கையை யுத்த சூழ­லுக்கு கொண்டு வர துடிக்கும் இன­வாத சக்­திகள் யாராக இருந்­தாலும் அவர்­க­ளுக்கு எதி­ராக உடன் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இது வரை நடந்­த­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்ற வன்­முறை சம்­ப­வங்­க­ளுடன் நேரடி தொடர்பு கொண்­ட­வர்கள் அனை­வ­ரையும் சட்­டத்தின் முன் நிறுத்த வேண்டும். 

குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்கும் விட­யத்தில் பார­பட்சம் காட்­டப்­ப­டக்­கூ­டாது. இந்த நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதி மேற்­கொள்ள தவறின் மறு­புறம் இந்த கெடு­பி­டி­யான சூழல் தொடர்ந்தும் இருக்­கு­மாயின் எமது முஸ்லிம் காங்­கிரஸ் தான் தீர்­மா­னித்­தலும் கூட தற்­போ­தைய ஜனா­தி­ப­திக்கு வாக்­க­ளி­யுங்கள் என முஸ்லிம் மக்­களை சந்­தைப்­ப­டுத்­து­வது என்­பது சாத்­தி­ய­மற்­ற­தா­கவே போகும். 

இருந்த போதிலும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஜனா­தி­பதி ஆகு­வதே எமது ஒட்டு மொத்த விருப்­ப­மாகும்.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது முஸ்லிம் காங்­கிரஸ் புரிந்­து­ணர்வு அடிப்­ப­டையில் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்­புடன் உற­வு­களை பேணி வந்­துள்­ளது. அதன் அடிப்­ப­டையில் எமது தலைவர் ரவூப்­ஹக்கீம் மற்றும் தவிசாளர் உட்­பட்­ட­வர்கள் அமைச்சர் பத­வி­களை ஏற்று வகித்து வரு­கி­றார்கள். இது போலவே கிழக்கு மாகாண சபையில் ஆளும் அர­சுக்கு ஆத­ரவு நல்கி அமைச்சர் பத­வி­களை வகித்து வரு­கின்றோம். கிழக்கு மாகாண ஆட்சி அமைப்­புக்கு சில நிபந்­த­னையின் அடிப்­ப­டையில் ஆத­ரவு நல்­கி­யி­ருந்தோம். 

முத­ல­மைச்சர் பத­விக்­கு­ரிய காலம் வரும் போது அது தொடர்­பான தீர்­மா­னங்­களை முஸ்லிம் காங்­கிரஸ் மேற்­கொள்ளும். இது போலவே ஊவா மாகாண சபை தேர்­தலில் சில பொது­வான முடி­வு­களின் படி ஒன்­றி­ணைந்­துள்ளோம். இதற்கு காரணம் மாகா­ணத்தில் சிதறி போய் கிடக்கும் முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களை பிரிந்து நின்று கேட்­பதன் மூலம் வெற்றி பெற முடி­யாது என்ற யதார்த்­தத்தை புரிந்து கொண்­டதன் கார­ண­மா­கவே இரட்டை இலைச்­ சின்னத்தில் நாம் ஒன்­றி­ணைந்­துள்ளோம்.

நாங்கள் அர­சாங்­கத்தின் பங்­காளி கட்­சி­யாக கரு­தப்­பட்­டாலும் எல்லா விட­யங்­க­ளிலும் உடன்­பாடு காணப்­ப­டு­கி­றது என்று சொல்லி விட முடி­யாது. உதா­ர­ண­மாக முஸ்லிம் காங்­கி­ரஸின் இத­ய­மாக விளங்­கு­கின்ற அம்­பாறை மாவட்­டத்தில் இப்­பி­ர­தே­சங்­க­ளி­னு­டைய பிர­தேச அபி­வி­ருத்தி ஒருங்­கி­ணைப்பு குழுவின் தலை­வ­ர் பதவி அமைச்சர் அதா­வுல்­லா­வுக்கே வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆறு பிர­தே­சங்­க­ளுக்கு அபி­வி­ருத்தி தலை­வ­ராக அவரே நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு வழங்­கப்­பட வேண்­டிய வாய்ப்­புக்கள் மறுக்­கப்­பட்­டுள்­ளன. இது இலங்­கையில் எவ்­வி­டத்­திலும் காணப்­ப­டாத விசித்­தி­ர­மாகும்.

இப்­படி ஒரு­வ­ருக்கே எல்லா பத­வி­களும் வழங்­கப்­ப­டு­கின்ற கார­ணத்தால் மாதாந்தம் கூட்­டப்­பட வேண்­டிய கூட்­டங்கள் மிக குறை­வா­கவே நடை­பெ­று­கின்­றன. வரு­டக்­க­ணக்கில் கூட்­டப்­ப­டா­ததும் உண்டு. 

இதனால் அம்­பாறை மாவட்­டத்தின் முக்கிய பிர­தே­சங்­க­ளான அக்­க­ரைப்­பற்று பொத்­துவில், அட்­டா­ளைச்­சேனை, இறக்­காமம், சம்­மாந்­துறை போன்ற பிர­தே­சங்­களின் அபி­வி­ருத்­திகள் பின்­தள்­ளப்­ப­டு­கின்­றன. எனவே இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கும் ஜனா­தி­பதி தீர்வு காண வேண்டும். அவ்­வப்­பி­ர­தே­சங்­களை சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மாகாண சபை உறுப்­பி­னர்கள் அபி­வி­ருத்தி குழுத்­த­லை­வர்­க­ளாக நிய­மிக்­கப்­பட வேண்டும்.

முஸ்லிம் காங்­கி­ரஸை பொறுத்­த­வ­ரையில் அது தனி­யொரு இனத்­துக்­கான கட்­சி­யென அடை­யா­ள­மிட்டு விட முடி­யாது. சிறு­பான்மை மக்கள் யாராக இருந்­தாலும் அவர்கள் பாதிக்­கப்­ப­டு­கின்ற போது அவர்­க­ளுக்­காக குரல் கொடுத்தே வந்­துள்­ளது.

குறிப்­பாக தமிழ் மக்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­பட்ட வேளை­களில் எல்லாம் அவர்­க­ளுக்­காக குரல் கொடுக்க காங்­கிரஸ் பின்­நின்­ற­தில்லை. சில­வே­ளை­களில் எதிர்­கா­லத்தில் பொது தேர்­த­லாக இருக்­கலாம் அல்­லது ஜனா­தி­ப­தித் தேர்­த­லாக இருக்­கலாம் மற்றும் மாகாண சபை தேர்­த­லாக இருக்­கலாம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் உடன்­பட்டு போவ­திலோ இணை­வ­திலோ சில­வே­ளை­களில் சங்­கடம் இருக்­கலாம். ஆனால் எதிர்­கால சூழ்­நி­லையில் இணைந்தே செயற்­பட வேண்­டு­மென்ற சூழல் உரு­வா­கு­மாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணை­வது பற்றி முஸ்லிம் காங்­கிரஸ் இணைந்து கேட்­பது பற்றி பரி­சீ­லிக்கும்.

ஜனா­தி­பதி உரை­யாற்றும் போதோ கலந்­து­ரை­யாடும் போதோ அடிக்­கடி ஒன்றை சொல்லி வரு­கின்றார் சட்­டத்தை யாரும் கையில் எடுக்க தாம் அனு­ம­திக்கப் போவ­தில்லை என்று. ஆனால் அவர் குறிப்­பிடும் அச்­சட்­டத்தை தம் கையில் எடுத்­துக்­கொண்டு குழப்பம் விளை­விக்கும் ஒரு குழு தொடர்ந்தும் தமது அடா­வ­டித்­த­னங்­களை நிகழ்த்­திக்­கொண்டே தான் இருக்­கின்­றது.

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக அவர் இருந்து வரு­கின்ற போதும் தாம் விரும்பும் விட­யத்தை நிறை­வேற்ற முடி­யாத சூழல் ஒன்று இன்று இலங்­கையில் உரு­வா­கி­யி­ருக்­கி­றது. இது பல்­வேறு சந்தே­கங்­களை மக்­க­ளி­டத்தில் தோற்­று­வித்து வரு­கி­றது. ஜனா­தி­பதி தனது அதி­கா­ரத்தை செலுத்தும் பொறி­மு­றைக்கு இடையில் பல தடங்கல் இருப்­ப­தாக ஊகிக்க முடி­கி­றது. எனவே, இது ஒரு ஆரோக்­கி­ய­மான சூழ­லாக காணப்படவில்லை என்றே கூற வேண்டும் என மன்சூர் தெரிவித்தார்.(வீ.கே)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :