தான் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் இந்நாட்டு பாடசாலைகளுக்கு உபகரணங்களை பெற்றுக் கொடுத்ததாகவும், பிரதமராக இருந்த காலத்தில் இணையத்தை அறிமுகப்படுத்தியதாகவும், இந்நாட்டு இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த அறிவை வழங்கி அதனூடாக தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சி செய்ததாகவும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சிறந்த அறிவை பெற்றுக் கொடுத்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக ராஜபக்ஷ அரசாங்கம் கொங்கிறீட் அபிவிருத்தியையே மேற்கொள்வதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இன்று (14) ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடு முழுவதிலும் கொங்கிறீட் அபிவிருத்தியை ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொள்வதாக ரணில் சுட்டிக் காட்டினார்.
தான் இன்று திறந்த புதிய பேஸ்புக் கணக்கின் ஊடாக மக்களுக்கு தகவல்களை வழங்கவுள்ளதாகவும், புதிய தொழிநுட்பங்களைக் கொண்டு இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment