புல்மோட்டை அரிசி மலை காணியில் மீண்டும் நில அளவையின் போது குழப்பம்

வியாழக் கிழமை(31) புல்மோட்டை அரிசிமலை பகுதியிலுள்ள காணிகளை பூஜ பூமி    திட்டத்தின் கீழ் திருகோணமலை நில அளவை திணைக்கத்தினால் குறித்த பகுதிக்குள் நில அளவை மேற்கொள்ள முற்பட்டபோது குறித்த பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ.எம்.அன்வர் ஜம்மியத்தல் உலமா சபையின் தலைவர் மௌலவி அப்துல் சமது அணைத்து ஒன்றியத்தின் தலைவர் மௌலவி ஐயுåப்கான் மற்றும் பிரதேசத்தின் பிரமுகர்கள் அங்கு பாதுகாப்புக்காக வருகை தந்திருந்த பொலிஸ் அத்தியட்சகர் புல்மோட்டை பொலிஸ் நிலயை பொறுப்பதிகாரி ஆகியோருடன் மேற்கொண்ட பேச்சு வாரத்தையின் போது பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை அளவிட்டதன் பின்னர் நீங்கள் அளவையை மேற்கொள்ளலாம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

பின்னர் பொலிஸார் தமக்கு மேலதிகாரிகளின் அறிவுறுத்தல் அவசியம் எனவும் தமக்கு அளவையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட பட்டதை அடுத்து மாகாண சபை உறுப்பினர் திருமலை மாவட்ட பொருளாதார பிரதி அமைச்சர் சுசந்ந புஞ்சி நிலம பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் பிரதேச சபை தலைவர் முபாரக் உட்பட பிரதேசத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் திருமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கச்சேரியில் இடம் பெற்றுக்கொண்டிருந்த வேளையில் தொலைபேசியினூடாக தொடர்பு கொள்ளப்பட்டு திருமலை மாவட்ட அரசாங்க அதிபருடனான பேச்சு வார்த்iயின் பின்னர் தற்காலிக இடைநிறுத்தப்பட்டது.

பின்னர் இது விடயமாக கலந்துரையாடுவதற்கு விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எதிர்வரும் செவ்வாய்கிழமை குச்சவெளி பிரதேச செயலகத்தில் செயலாளர் தலைமையில் காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் திருமலை மாவட்ட பொருளாதார பிரதி அமைச்சர் சுசந்ந புஞ்சி நிலம பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் பிரதேச சபை தலைவர் முபாரக் கிழக்கு மாகாண சபை உறுப்பின் அன்வர் மற்றும் ஏனைய பிரதேசத்தின்அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்
குறித்த பகுதியில் பல தடைவ நில அளவை மேற்கொள்ள முற்பட்ட போது பொது மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்படத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :