ஹிஜாப் அணிந்து வாக்களிக்கச் செல்லும் பெண்களை அடையாளம் காண்பதற்கு பெண் உத்தியோகத்தர் கடமையில்

ஸ்லாமிய கலாச்சார ஆடையான ஹிஜாப் அணிந்து வாக்களிக்கச் செல்லும் பெண்களை அடையாளம் காண்பதற்கு பெண் உத்தியோகத்தர்களை வாக்குச் சாவடிகளில் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

புல்பேஸ் ஹெல்மட் போன்றவற்றை அணிந்து வாக்குச் சாவடிகளுக்குச் செல்லும் ஆண்களை அடையாளம் காணவும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். ஆள் அடையாளத்தை உறுதி செய்ததன் பின்னரே வாக்குச் சீட்டுக்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக வாக்குச் சாவடிகளில் ஆண், பெண் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை வாக்காளர்கள் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு ஆள் அடையாளத்தை உறுதி செய்யத் தவறும் நபர்கள் வாக்களிப்பில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வாக்குச் சாவடிகளுக்குள் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இஸ்லாமிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை அணிந்து வாக்குச் சாவடிகளுக்கு செல்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக முகத்தை முழு அளவில் அல்லது பகுதி அளவில் மூடிக்கொண்டு வாக்குச் சாவடிக்குள் பிரவேசிக்க அனுமதிக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :