ஊவா மாகாணசபைத் தேர்தலில் தமிழ் பிரதிநிதித் துவத்தை அதிகரிக்கும் வகையில் தமிழ்க்கட்சிகளின் தலைமைகள் செயற்படவேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஊவாமாகாணசபைத் தேர்தலில் மலையகத் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து ஒருபொதுவேலைத் திட்டத்தில் ஒட்டுமொத்த மலையக மக்களின் எதிர் கால நன்மைகருதி ஒன்றுபட்டு செயற் படவேண்டும் என தமிழர் விடுதைலக் கூட்டணி எதிர் பார்க்கின்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பித்த போது தந்தைசெல்வா, இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானையும் இணைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவராகவும் ஏற்றுக் கொண்டே செயற்பட்டார் அதன் நோக்கம் மலையகத் தலைமைகளை அரவணைத்துக் கொண்டுதான் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வினைப் பெற்றுத் தரமுடியும் என்ற அவரின் திடமான நம்பிக்கையேயாகும்.
அவர்வழியில்தான் இன்று வரை தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டுவருகின்றது. அதனால்தான் நடந்து முடிந்த மேல்மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஒருகுறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு தெரிவித்துவாக்களிக்குமாறுகேட்டுக் கொண்டதை தவறு என நான் சுட்டிக்காட்டி 24.03.2014 அன்று ஊடகங்கள் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாமல் வடமாகாண முதலமைச்சர் உட்பட ஒருசில கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருகுறிப்பிட்ட கட்சிக்கே ஆதரவு தெரிவித்து மேடைகளில் உரையாற்றினர்.
அதன் விளைவால் ஏற்கனவேமேல் மாகாணசபையில் இருந்த தமிழ் பிரதிநிதித்துவம் குறைந்ததோடு மட்டுமல்லாமல், வடக்கு, கிழக்கிற்கு வெளியில் ஏனைய அரசியல் கட்சிகளைச் சார்ந்த தமிழ் உணர்வோடுசெயற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் பிரமுகர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை மனக் கசப்புடனேயே பார்க்கவேண்டிய சூழ்நிலையையும் உருவாக்கிவிட்டது. இந்த தவறுக்கு வடமாகாண முதலமைச்சர் எவ்வாறு ஆதரவு தெரிவித்தார் என்பதுஎனக்கு ஆச்சரியத்தை தந்தது ஆனால் அவர் இதனை முழு மனதுடன் செய்திருக்க மாட்டார் என்றே நினைக்கின்றேன்.
ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மலையக அரசியல் தலைமைகளுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தாது அவர்கள் அனைவரையும் ஒற்றுமைப் படுத்தி தந்தைசெல்வா காட்டிய வழியில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க செய்வதற்காகவேபாடுபடும் என்பதை இந்தசந்தர்ப்பத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன்.
தமிழ்த் தேசியகூட்டமைப்பின் தலைவர்களில் ஒருசிலர், ஒருகுறிப்பிட்ட குழுவினர்தான் தமிழ்த் தேசியத்திற்காக பாடுபட்டது போலவும் ஏனைய தமிழ் அரசியல் தலைமைகள் எல்லோரும் துரோகிகள் போலவும் சுட்டிக்காட்டிதங்களை உத்தமர்கள் போல காட்டிக் கொள்கின்றார்கள்.
அதனால் தான் இன்றுவரை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒருநிரந்தர தீர்வினைபெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. தமிழ் அரசியல் தலைமைகளை ஒன்றுசேர்க்க வேண்டியபொறுப்பிருந்தும் அவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
எதிர் காலத்தில் இவ்வாறான தவறுகளைசெய்யாதுபொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டுமென அவர்களை கேட்டுக்கொள்கின்றேன். மலையக அரசியல் தலைமைகள் அனைவரையும் சந்தித்து ஒற்றுமையை வலியுறுத்தி அதற்கேற்றவாறு அவர்கள் செயற்படுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தீர்மானித்திருந்தேன். காலம் போதாமையால் அதற்கான முயற்சிகளை தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தல் முடிந்த பின்னர் மேற்கொள்ளும் எனவும் இந்த சந்தர்ப்பத்தில் கூறி வைக்க விரும்புகின்றேன். இந்த தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நடுநிலைமைவகிக்க தீர்மானித்துள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஏற்னவே மலையக அரசியல்தலைமைகள், ஊவாமாகாண சபைத் தேர்தலில் சிந்தித்து ஒற்றுமையுடன் செயற்பட்டு தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமளவிற்குசெயற்படவேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி கேட்டுக்கொள்கின்றது.அத்துடன் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வாழ்த்துக்களையும தெரிவித்துக்கொள்கின்றது.

0 comments :
Post a Comment