_Copy1.jpg)
அஷ்ரப் ஏ. சமத்-
அமைச்சர் விமல் வீரவன்சவின் 12 அம்சக் கோரிக்கைகளில் 9னை ஏற்று ஜனாதிபதியின் சார்பில் ஏழுத்து மூலம் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, டலகஸ் அழகப்பெரும ஆகியோர் கைச்சாத்திட்டு அமைச்சார் விமல் வீரவன்சவிடம் நேற்று இரவு கையளித்தனர்.
அதன் பின்னர் அமைச்சர் விமலின் அணி தனித்து ஊவாவில் தேர்தல் கேட்பதை விட்டு மொன்றாகலையில் மட்டும் அரசுடனும் பதுளையில் தனித்தும் தேர்தலில் குதிக்கின்றது.
அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சியில் இருந்த முன்னாள் மாகணசபை உறுப்பினர் ஒருவர் கடந்த மாதம் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியில் இணைந்திருந்தார். அவர் இம்முறை ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியில் சார்பில் மொன்றாகலை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு கைச்சார்த்திருந்தார்.
அமைச்சர் விமலின் வேண்டுகோளுக்கினங்க அவரின் பெயரை நீக்கிவிட்டு அமைச்சர் விமல்வீரவன்சவின் மொன்றாகலை அமைப்பாளருக்கு ஜக்கிய மக்கள் சுதந்திரமுன்ணனியில் போட்டியிட சர்ந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அத்துடன் விமலின் கட்சி பதுளை மாவட்டத்தில் மட்டும் தனித்து போட்டியிடுவரை ஜக்கிய மக்கள் முன்னணி அங்கீகரித்துள்ளது.
இன்று(6)ஆம் திகதி அமைச்சர் விமல் வீரவன்சவின் பத்தரமுல்லையில் உள்ள் கட்சி அழுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே விமல் வீரவன்ச மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது – அரசாங்கம் பிழையான கொள்கைகளில் தவறிப்போவதை திருத்தி சரியான பாதைக்கு இட்டுச் செல்வதற்கே எமது கட்சி 12 கோரிக்கைகள் கையளித்தோம். அதற்கு ஜனாதிபதி அவர்கள் நியமித்த மேற்படி 3 அமைச்சர்களுடன் எனது கட்சியான தேசிய சுதந்திர முன்ணனி கடந்த 5 முறை பல்வேறு சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு மேற்படி தீர்வு பெறப்பட்டுள்ளது.
நாம் முன்வைத்த கோரிக்கைகளில் 26 பிரச்சினைகள் அரசு ஒப்புதல் அளித்துள்ளன.
இவைகள் அணைத்தும் இந்த நாட்டு மக்களுக்கு நன்மைபயக்கும் திட்டமாகும். இவைகள் அடுத்த 3,6 மாத காலத்திற்குள் அமுல்படுத்தப்படும். இந்த 26 பிரச்சினைகளும் அடுத்த வரவுசெலவுத்திட்டம், ஜனாதிபதித்தேர்தலின்போது மக்கள் முன் வைக்கப்படும்.
விவசாயிகளுக்கான வங்கி, விவசாயிகளின் உற்பத்திக்கு மட்டுமே இலங்கையில் முக்கியத்துவம் அளித்தல், ஹிங்குரானை, கந்தளாய் சீனித்தொழிற்சாலைகளை மீள ஆரம்பித்தல், வவுனியா, குருநாகலை,கந்தளாய் போன்ற பிரதேசங்களில் உள்ளூர் பால் உற்பத்தி மற்றும் பால்மா சாலைகள் ஆரம்பித்தல்.
பெருந்தெருக்கள் மற்றும் அடிப்படை வசதிகள் அமைக்கும் விசேட திட்டத்தினை குறைத்தல், அதற்கு சமமான திட்டங்களை கிராமத்திற்கு கொண்டு செல்லல். பௌத்தசாசனம், விகாரைகள். மதமாற்றம், மகாவம்ச போன்ற பௌத்த அரசியல் திட்டங்களை சரியான முறையில் மாற்றியமைத்தல், பாடசாலைகள், தகம் பாடசாலைகளில் அநாகரிக தர்மபாலவின் பெயரில் கல்வித் திட்டமொன்றை ஆரம்பித்தல்.
அநுராதபுரம், மொன்றகாலை மாவட்டங்களில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவர்களுக்கு தனியான நிதியம்மொன்றை ஆரம்பித்து அவர்களுக்கு முற்றாக உதவுதல்.
இந்த நோய்கான பிரதான காரமாக உள்ள இரசாயணத்தை முற்றாக இலங்கையில் இறக்குமதி செய்வதை தடுத்தல், விவசாயிகளுக்கு வெற் வரி இல்லாமல் செய்தல், உள்ளூர் முதலிடுபவர்களுக்கு 150 மில்லியன் யு.எஸ் டொலரில் முதலிட்டு கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிப்பதற்கு வசதிஅளித்தல். அதற்கான வரி சலுகைகளை வெளிநாட்டவருக்கு முதலிட கொடுக்கும் சகலதையும் உள்ளுர் முதலீட்டாளர்களுக்கு வழங்குதல். உள்ளூரில் உள்ள விவசாய நிலங்களை வெளிநாட்டவருக்கு உற்பத்திபண்னக் கொடுப்பதை தடுத்து நிறுத்துதல்.
தற்பொழுது உள்ள 976 அரசியல் யாப்பை சிறுக சிறுக பழுதுபார்க்காமல் முற்றாக திருத்தியமைத்து அதனை மக்களின் வாக்கெடுப்பிட்டு அதனை எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் அறிமுகப்படுத்துதல்.
அமைச்சுக்களில் உள்ள விசேட திட்டங்கள் அணைத்திலும் நிதிமோசடிகள் நடைபெறுகின்றன. அது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அமைச்சின் அங்கிகரித்துடன் அதனை மோசடி பெறும் இடத்து அவர்களுக்கு தண்டனை பெறக்கூடிய வகையில் அரச நிருவாகத்தில் திருத்தியமைத்தல்.
போதைப்பொருளுக்கான தனியான இரானுவ பொலிஸ்,விசேட கடற்படை கொண்ட பிரிவை ஏற்படுத்தி அதற்காக தனியான நீதிமன்றமொன்றையும் நிறுவுதல். இந்த நாட்டில் உள்ள பௌத்த மதகுருமார்களின் வேண்டுகோலின் படி அவர்களது சாசனம், மற்றும் பண்சலைகள், அவர்களுக்குரிய சலுகைகள், சொத்துக்கள், புலமைப்பரிசில்கள் என்பன ஏற்படுத்துதல். ஆகிய பொருளாதார உற்பத்தி மற்றும் உள்ளூர் முதலீடு மற்றும் பௌhத்த கலை கலாச்சார புதிய திட்டங்களையே அரசுடன் கையெழுத்துயிட்டு தீர்வு காணப்பட்டுள்ளன. என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்

_Copy1.jpg)
0 comments :
Post a Comment