இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கு வெளிநாட்டு ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என தவாஹிட் ஜமாத் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.சர்வதேச ஊடகமான அல் ஜசீராவிற்கு அளித்த நேர் காணலின் போது இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.இலங்கை வாழ் முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு முஸ்லிம் நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு குறித்த இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்ப முடியாது என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, தவாஹிட் ஜமாத் அமைப்பின் கருத்துக்களுக்கு பௌத்த அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.இந்த அமைப்பு ஒர் பயங்கரவாத அமைப்பு என சிங்கள பௌத்த அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க வெளிநாடுகளின் உதவியை கோரியதன் மூலம் இந்த அமைப்பு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளன. இது தொடாபில் பாதுகாப்பு தரப்பினரும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment