மத்தளை விமான நிலையத்தின் மே மாத வருமானம் 16000 ரூபா என அரசாங்கம் பாராளுமன்றில் அறிவித்துள்ளது. மத்தளை மஹிந்த ராஜபக்ஷ வமான நிலையத்தின் மே மாதத்திற்கான மொத்த வருமானம் அண்ணளவாக 16000 ரூபா என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியன்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்தின் கட்வீக் விமான நிலையத்திற்கு நிகரான வருமானத்தை மத்தளை விமான நிலையத்தின் ஊடாக ஈட்ட முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்ததாகவும், அந்தக் காலம் எப்போது வரும் எனவும் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியிருந்தார்.
மத்தளை விமான நிலையம் ஒர் நாள் தொல்பொருள் காட்சியமாக மாற்றமடைந்து விடும் என அவர் குறிப்பிட்டிருந்தார். மத்தளை விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய சில காலம் தேவைப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment