வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்பட்டிருந்தால் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்காது-சம்பந்தன்

வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்பட்டிருந்தால் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுத் திட்டங்களை வழங்க முன்வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிடம் வாக்குறுதி அளித்திருந்தார் எனவும் சில சந்தர்ப்பங்களில் 13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுது; திட்டமொன்றை முன்வைப்பதாக அறிவித்திருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவி;ப் பிரமாண நிகழ்விகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்ற போதும் அதிகாரப் பகிர்வு குறித்து பேசப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமாதான முனைப்புக்களை முன்னெடுக்க நோர்வே அரசாங்கம் வழங்கிய பங்களிப்ப பாராட்டப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணியம் சுவாமி வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுப்ரமணியம் சுவாமியின் இலங்கை அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :