ஜம்இய்யதுல் தஃவதுல் இஸ்லாமியாவின் அனுசரனையில் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான இப்தாா் நிகழ்வுடனான ஒரு வார கால இஸ்லாமிய பயிற்சி நெறி 2014.07.07 - 2014.07.14ஆந்திகதி வரை மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இவ்இஸ்லாமிய பயிற்சி நெறியை முடித்துக்கொண்ட மாணவர்களுக்கான இறுதிநாள் வைபவம் 2014.07.17ஆந்திகதி வியாழக்கிழமை பி.ப. 05.00 மணியளவில் மீராவோடையில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் பள்ளிவாயலில் ஜம்இய்யதுல் தஃவதுல் இஸ்லாமியாவின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க். A.L. பீர்முஹம்மது (காஸிமி) (M.A.) அவர்களின் தலைமையில்நடைபெற்றதோடு, இப்பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இறுதியாக நடைபெற்ற பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களுக்கான 1ஆம், 2ஆம், 3ஆம் பரிசில்களும், ஆறுதல் பரிசில்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஏனைய பிரமுகர்களாக ஜம்இய்யதுல் தஃவதுல் இஸ்லாமியாவின் செயலாளர் அஷ்ஷெய்க். S.H.M. அறபாத் (ஸஹ்வி), ஜம்இய்யதுல் தஃவதுல் இஸ்லாமியாவின் சமூக சேவைப்பிரிவு இணைப்பாளர் ஜனாப். M.N.M. சாஜஹான்,ஜம்இய்யதுல் தஃவதுல் இஸ்லாமியாவின் கல்விப்பிரிவு இணைப்பாளர் ஜனாப். M.B. நபீர் ஆசிரியர், KCDAயின் செயலாளர் ஜனாப். M.T. ஹைதர் அலி, ஜம்இய்யதுல் தஃவதுல் இஸ்லாமியாவின் மாணவர் பிரிவுத் தலைவர் ஜனாப். M. அறபாத், ஜம்இய்யதுல் தஃவதுல் இஸ்லாமியாவின் நிருவாகிகள் மற்றும் KCDAயின் நிருவாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு இப்பயிற்சி நெறியினை முடித்துக்கொண்ட மாவணர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியதோடு, இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கான இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது..
தகவல்
KCDA ஊடகப்பிரிவு
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment