அல் கைதா அமைப்போ ஏனைய பயங்கரவாத அமைப்புகளோ இலங்கையில் தளங்களை கொண்டிருக்கவில்லை என்று இராணுவப்பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகமைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். அல் கைதா அமைப்பைச்சேர்ந்த சிலர் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஊடகவியலாளா்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அல் கைதா சர்ச்சை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்...
வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் இலங்கைக்குள் இயங்குவதாக பல முறை குற்றஞ்சாட்டப்பட்டன. அவ்வாறான குழுக்கள், இலங்கைக்குள் இயங்குவதற்கு இலங்கை அரசாங்கம் எந்த சந்தர்ப்பங்களையும் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். பயங்கரவாத செயற்பாடுகளுக்கு இலங்கைக்குள் இடமளிக்கப்படமாட்டாது. தமிழ் பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை அழித்தது போல, ஏனைய பயங்கரவாத அமைப்புகளும் அழிக்கப்படும்.
பயங்கரவாதம் என்பதில் மாற்றங்களும் இல்லை அது எந்த வடிவமாக இருந்தாலும் பயங்கரவாதமேயாகும் என்றார். முஸ்லிம்களோ, முஸ்லிம் குழுக்களோ இலங்கைக்குள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சித்தால், அதற்கு இடமில்லை. விடுதலைப் புலிகள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டார்களோ அவ்வாறு ஏனைய பயங்கரவாத அமைப்புகளும் தோற்கடிக்கப்படும் என்றார்.
0 comments :
Post a Comment