எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாம்:ரணிலுக்கு தடைபோட்டார் சம்பந்தன்!

திர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது புத்திசாதூரியமான தீர்மானமாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது பொருத்தமானதாக அமையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 


தேர்தலில் பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அது அரசாங்கத்திற்கே சாதக தன்மையை ஏற்படுத்தும் எனவும் தேர்தலில் வெற்றியீட்டக் கூடிய சாத்தியங்கள் குறைவு எனவும் சம்பந்தன், நேரடியாக குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவது குறித்து ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட ரீதியில் கட்சிகளின் முக்கியஸ்தர்களிடம் கருத்து கோரி வருகின்றார். இதன் ஓர் கட்டமாக அண்மையில் கொழும்பில் வைத்து மாதுலுவே சோபித தேரர் மற்றும் சம்பந்தன் ஆகியோரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது சம்பந்தன், குறித்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :