ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களினதும், விளையாட்டு வீரர்களினதும் நன்மையைக் கருத்திற் கொண்டு, பல்வகை விளையாட்டுத் தொகுதிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று ஹசன் அலி பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.சுல்பிகார்
தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, எம்.சி.பைசால் காசீம் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், பிரதேச செயலாளர் திருமதி.ஆர்.யூ.அப்துல் ஜலீல் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு, கட்டிடத்திற்கான அடிக்கற்களை நாட்டி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்களான
எம்.ரி.ஜப்பார் அலி, எம்.எம்.அன்சார் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் இதில்
கலந்து கொண்டனர்.நிந்தவூர்ப் பிரதேச விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டு வீரர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், தம்முடைய பன்முகப்படுத்தப் பட்ட நிதியிலிருந்து ரூபாய் 35 இலட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்
“இப்பிரதேசத்தின் குறைகளில் ஒன்றாகக் காணப்பட்ட இக்கட்டிடத் தொகுதிக்கான ஆரம்ப வேலைகள் இன்றுடன் விரைவு படுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இப்பிரதேச விளையாட்டு வீரர்கள் இதனைப் பயன்படுத்தி, விளையாட்டுக்கள் மூலம் நமது பிரதேசங்களிலும், நாட்டிலும் ஒற்றுமை, சமாதானம் மலர பாடுபடவேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment