அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன ஐயக்கியத்தையும் - நல்லிணகக்கத்தையும் ஏற்படுத்தும் வகையிலான இப்தார் நிகழ்வு 14.07.2014ம் திகதி திங்கட் கிழமை சுவாட் மண்டபத்தில் இணையத்தின் தவிசாளர் திரு. வடிவேல் பரமசிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது றமழான் மாதத்தின் முக்கியத்துவம் மற்றும் நோன்பு நோற்பதன் தாற்பரியம் போன்ற விடயங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்ட மதப் பெரியார்களால் எடுத்தியம்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தவகையில் ஹிந்து சமயத்தில் சமூக ஒற்றுமை மற்றும் உபவாசம் தொடர்பில் எவ்வாறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி அக்கரைப்பற்று காளி கோயில் பிரதமகுரு விஸ்வகுல பிரம்மசிறீ தங்கவேல் குருக்கள் அவர்கள் தெளிவாகக் கூறினார்.
மேலும், இஸ்லாமிய சமயத்தில் நோன்பின் முக்கியத்துவம் - அது ஏன் நோற்கவேண்டும், அதன் சிறப்புகள் என்ன, இதனால் சமூகத்தில் எவ்வாறான ஒற்றுமைகள் ஏற்படுகின்றன சமயங்களுக்கிடையிலான தொடர்புகள் எவ்வாறு பேணப்பட வேண்டும் என்பவை பற்றி மௌலவி உமர்.ஏ.இப்றாஹீம் (ஷர்கி) - அட்டாளைச்சேனை. அவர்களால் மிகவும் அழகாகவும் - தெளிவாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
இப்தார் நிகழ்வைத் தொடர்ந்து இணையத்தின் அங்கத்துவ அமைப்புக்களில் ஒன்றான வை.எம்.சீ.ஏ நிறுவனத்தின் தலைவர் ஜே.ஏ.சந்திரசிறீ அவர்களால் கிறிஸ்துவ மதத்தில் நோன்பானது எவ்வாறு பேணப்படுகின்றது என்பது பற்றி சிற்றுரை நிகழ்த்தப்பட இறுதியாக இணையத்தின் செயலாளரும், நிந்தவூர் நேசம் அமைப்பின் தலைவருமான ஜனாப்: ஏ.எல்.எம்.பசீர் அவர்களால் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவிழலைப் பகிர்ந்து கொண்டார்.
இதன்போது அம்பாறை மாவட்ட இணையத்தின் அங்கத்துவ நிறுவனங்களின் உறுப்பினர்கள் மற்றும் இதர அரச , அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.







0 comments :
Post a Comment