காஸாவில் உள்ள ஷிபா மருத்துவமனையில் பணியாற்றிவரும் நோர்வே நாட்டு மருத்துவரான கில்பர்ட் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவரது கடிதம் பின்வருமாறு அமைந்துள்ளது.
“ஒபாமா உங்களுக்கு இதயம் ஒன்று இருக்கின்றதா? வெறுமனே ஒரே ஒரு இரவு இந்த ஷிபா மருத்துவமனையில் எங்களுடன் இருந்து பாருங்கள்.
அது வரலாற்றையே மாற்றிவிடும் என நான் 100% உறுதியாக நம்புகிறேன். இதயம் இருக்கும் எவரும் இங்கு ஒரு நாள் தங்கிவிட்டு பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்காமல் இருக்கமாட்டார்.
ஆனால் இரக்கமற்ற இதயமற்றவர்கள் இன்னுமொரு படுகொலைக்குத் திட்டமிடுகிறார்கள். இங்கு இரவு முழுவதும் இரத்த ஆறு ஓடுகிறது.
அவர்களின் மரண ஓலங்களை என்னால் கேட்க முடிகிறது. உங்களால் முடியுமானதை தயவு செய்து செய்யவும். இதனைத் தொடர முடியாது.” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment