இனவாதத்தை தூண்டும் வகையில் ஊடகங்கள் செயற்படக் கூடாது என முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
நாட்டில் இனவாத மற்றும் மதவாத பிரச்சினைகள் உருவாக ஊடகங்களும் ஓர் வகையில் பங்களிப்புச் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இனவாத நடவடிக்கைகளை ஊடகங்களும் சிவில் சமூகங்களும் கண்டிக்க வேண்டமென அவர் வலியுறுத்தியுள்ளார். சம்பவங்களை பூதாகாரமாக்கி பிரச்சினைகளை பெரிதுபடுத்த ஊடகங்களை சிலர் கருவியாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று உரத்த குரலில் சத்தமிடும் தரப்பினர் 30 ஆண்டு கால யுத்தத்தின் போது எங்கு ஒளிந்து கொண்டிருந்தார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பெரும்பான்மையான மேற்குலக நாடுகள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட போதிலும், அரபு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவே செயற்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்பட்டு வாழ முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :
Post a Comment