எம்.ஐ.சம்சுதீன்,எம்.வை.அமீர்-
சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு, இன்று (2014-07-27) சாய்ந்தமருது பௌஸி கடற்கரை விளையாட்டு மைதானத்தில், முன்னாள் அதிபர் ஐ.எல்.எ.மஜீத் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பாரளமன்ற உறுப்பினர் பீ.பியசேன அவர்கள் கலந்து கொண்டார்கள். விசேட அதிதிகளாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.ஜவாத் அவர்களும் முன்னாள் கல்முனை மாநகரசபையின் பிரதிமுதல்வரும் தற்போதைய உறுப்பினருமான எ.எ.பஸீர் அவர்களும் கல்முனை உவெஸ்லி பாடசாலையின் அதிபர் அவர்களும் கலந்து கொண்ட அதேவேளை பெரும்திரளான விளையாட்டு வீரர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மௌலவி அகமட்லெப்பே அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினர்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment