சாய்ந்தமருதில் முதன் முறையாக பிறை பார்ப்பதற்கான ஏற்பாடு

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுத்து வருவது யாவரும் அறிந்த விடயமாகும்.
குறிப்பாக சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தின் கல்வி, சமயம், கலாச்சாரம் மற்றும் சமூகநலன் விடயங்களில் அதிக அக்கறை எடுத்து வருகின்றது.

அந்த வகையில் இம்முறை முதற்தடவையாக பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகளையும் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர் மேற்கொண்டிருந்தனர். இன்றைய (27.07.2014) தினம் வானம் சிறிது கருமேகங்களால் சூழப்பட்டிருந்தாலும் கூட தங்களின் முயற்சியைக் கைவிடாது பி.ப. 6.30 மணியிலிருந்து இரவு 7.00 மணி வரை முன்கூட்டியே தெரிவு செய்யப்பட்ட இடத்தில் பின்வருவோர் ஒன்றுகூடியிருந்தார்கள்.

1) அல்-ஹாஜ் வை. எம். ஹனிபா (தலைவர் சாய்ந்தமருது-
மாளிகைக்காடு நம்பிக்கையாளர் சபை)
2) அல்-ஹாஜ் எம். ஐ. ஆதம்பாவா (பேஸ் இமாம், சாய்ந்தமருது)
3) அல்ஹாஜ் ஏ. அஸரப் (உலமா சபை, சாய்ந்தமருது)
4) அல்ஹாஜ் ஏ. ஏ. மஜீட் (செயலாளர், சாய்ந்தமருது-மாளிகைக்காடு
நம்பிக்கையாளர் சபை)
5) ஏ. அஹமட்லெப்பை (கௌரவ மரைக்காயர்)
6) ஐ. எல். எம். மன்சூர் (கௌரவ மரைக்காயர்)
7) ஏ. சீ. எம். இக்பால் (கௌரவ மரைக்காயர்)
8) எம். சீ. பாறூக் (கௌரவ மரைக்காயர்)
9) எம். ஐ. மஜீட் (கௌரவ மரைக்காயர்)
10) டாக்டர் என். ஆரிப் (கௌரவ மரைக்காயர்)
இன்ஸாஅல்லாஹ், இம்முயற்சியைக் கைவிடாது ஒவ்வொரு வருடமும் சிறப்பான முறையில் மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தகவல்;: டாக்டர் என். ஆரிப்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :