பத்தரமுல்லைச் சந்தியில் பாத்திமா இனவாதியால் தாக்கப்பட்டுள்ளார்.


அஸ்ரப் ஏ சமத்-

ந்த நாட்டில் ஏற்பட்டுள்ள இனக்குரோதத்தின் எதிரொலி- ஒர் அப்பாவி ஏழை முஸ்லிம் பெண்னைக்கூட விட்டு வைக்கவில்லையே.

நேற்று முன்தினம் ஞயிறு(29)ஆம் திகதி இரவு 10.00 மணியலவில் தனது கடையை மூடும்போது தனக்கு ஒருவர் பாரங்கல் ஒன்றை எனது கண்னத்தில் வீசிவிட்டு ஓடினார்.

 நான் இறத்தம் சிந்த கதறி கீழே விழுந்தேன் என கடந்த 65 வருட காலமாக பத்தரமுல்லை சந்தியில் உள்ள வெற்றிலை விற்கும் பாத்திமா முறையிட்டார்.

அதன் பின்னர் உள்ளேயிருந்த எனது சக சகோதரியும் கதறிஅழுது அக்கம்பக்கத்தார் வந்தனர். அதன் பின்னர் கொஸ்வத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வந்து எண்னை கொஸ்வத்தை வைத்தியசாலையில் அனுமதித்தனர். அதன்பின் மறுநாளே எனது கடையை நடத்துவதற்கு யாருமில்லை மீள தனது வியாபாரத்தை தொடருகின்றேன். ஆனால் எனது ஒரு கன்னும் பாரங்கல்லினால் தாக்கினால் எவ்வாறு இருக்கும் முகம் வீக்கி மிகவும் வேதனையாலேயே மீள எனது வியாபாரத்தை தொடருகின்றேன்.
அளுத்தகம சம்பவத்தின் பின் அடுத்த நாள் எங்களது கடைக்கு கொஸ்வத்த பொலிசார் ஒருவர் பாதுகாப்புப் கடமையில் இருந்துவந்தார். சம்பவதினமன்று கடமையில் இருந்;த பொலிசார் விடுமுறை சென்றதாகவும் அவர் வரவில்லை. 

இதுவரை எனது கண்னுக்கு கல்வீசியவரை யாரென்று எனக்கு தெரியாது? சம்பவம் நடைபெற்ற அன்று பிரதிப்பொலிஸ்மாஅதிபர் தொடக்கம் சகலரும் வந்து என்னை வந்து பார்த்தார்கள். விசாரித்தார்கள். அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் இரவு பத்துமணியலவி;ல் வீதிகளில் இருக்க வில்லை. நைட்ஹோட்டல் மட்டுமே அந்நேரத்தில் திறந்துஇருந்தது. அவர்களும் அறிந்திருக்கவில்லை. என அப்பாவி பாத்திமா அழுகையுடன் எண்னிடம் முiறியிட்டார்.

நான் பிறந்த கடந்த 40 வருடகாலமாக இந்த பெட்டிக் கடையின் பின்புறத்திலேயே நானும் சகோதரிகளும் அவர்களது மகனும் மகளும் வசித்து வருகின்றோம். சிங்களவகளோ எமது வாடிக்கையாளர்கள் நல்ல நண்பர்கள் அக்கம் பக்க வியாபாரிகள் கூட உதபுவார்கள். இவ்விடத்திலேயே பிறந்து பழகிய எனக்கு இந்த நிலை என்றால் ? சாதாரண வீதியில் போகும் முஸ்லிம் பெண்களின் நிலை என்னவாகும் எனக் கேட்கின்றார்? அந்த அப்பாவி ஏழை தனது வயிற்றுப் பசிக்கு அன்றாடம் வெற்றிலை விற்று பிழைக்கும் பாத்திமா ?

எனது தந்தை பேருவளையைச் சேந்த தாஹீர் 1949ஆம் ஆண்டு பத்தரமுல்லை சந்தியில் 25ருபா வடகைக்கு வந்து அக்கடையை 50 வருடத்திற்குப்பிறகு சொந்தமாக வாங்கியுள்ளார். அவர் வெற்றிலையை பாக்கு, சுன்னாம்பு,புகையிலை போன்றவற்றை புறக்கோட்டையிற்குச் சென்று வாங்கி வந்து இந்த சின்னக்கடையில் அதனை சுற்றி விற்பார். 

பத்தரமுல்லையில் முஸ்லீம்களுக்கென ஒரே ஒரு கடை எங்களது கடை மட்டுமே உள்ளது. அதுவும் 5 அடி அறை கடையும் பின்புறம் 15 அடிகொண்ட அiயொன்றும் உள்ளது. இது பெரிய வியாபாரம் நிறுவணமல்ல ஒரு சிறு பெட்டிக் கடையாகும். எனது தந்தைக்கு உதவியாகவே எங்களது சகோதரிகள் அனைவரும் இங்கு இருந்துவந்தோம். எனது தந்தை இக்கடையினாலேயே 6 பெண்பிள்ளைகளையும். வளர்த்தார். கடந்த 7வருடங்களுக்கு முன் அவர் காலமாகியதையடுத்து நானே இந்தக் கடையை நடாத்தி வருகின்றேன். 

எனது தந்தையைப்போன்று நானும் புறக்கோட்டைக்குச் சென்று வெற்றிலையயை பாக்கு வாங்கி விற்கின்றேன். எனது கடைக்குக் கூட எனது தந்தை பாத்திமா ஸ்டோர் என பெயர் வைத்துள்ளார். எனத் தெரிவித்தார். பாத்திமா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :