அன்சார்-
குத்பாவுக்குச் செல்வதற்காகத் தயாராகி பள்ளிவாசலை நோக்கி வீதியால் நடந்து செல்கிறேன்...நான் செல்லும் வழியில் ஒரு சில காட்சிகளைக் கண்டேன், மனம் வெந்தேன்.
ஒரு வகையினர்...சிவப்பு நிறத்திலான துருக்கி தொப்பி அணிந்து வெள்ளைக் நிறத்திலான கோட் ஒன்று அணிந்து, சாரன் உடுத்து பள்ளிக்குச் செல்கிறார்கள், இவர்கள் செல்லும் வழியிலேயே ஒரு பள்ளிவாசலில் குத்பா சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது ஆனால் அந்தப் பள்ளிக்கு அவர்கள் செல்லவில்லை காரணம் கேட்டேன் அவர்களுக்கென்று ஒரு பள்ளிவாசல் இருக்கின்றதாம்...அங்கே செல்கிறார்களாம் என்று ஒருவர் சொன்னார்.
இவர்கள் யார் என்று கேட்டேன் தரீக்காவாதிகளாம்.
இன்னுமொரு வகையினர்....இவர்கள் சாதாரணமாக நாம் அணியும் சேட், சாரம், டீசேட், ரவுஸர் அணிந்தும், தொப்பி அணிந்தும், தொப்பி அணியாமலும் இவர்களுக்கென்று ஒரு பள்ளிவாசல் இருக்கிறதாம் அங்கே இவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.
இவர்கள் யார் என்று கேட்டேன் தௌஹீத்வாதிகளாம்.
மன்றுமொரு வகையினர்...இவர்கள் ஜிப்பா, தொப்பி, நீளமான தாடி வைத்துக் கொண்டு அவர்களுக்கென்று இருக்கும் பள்ளிவாசல்களுக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.
இவர்கள் யார் என்று கேட்டேன் தப்லீக்வாதிகளாம்.
இப்படி மூன்று வகையினர் அவர் அவருக்கேற்ற விதத்தில் தனித்தனியாக அவர் அவர்களுக்குரிய பள்ளிவாசல்களுக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.
எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது நாம் எந்தப் பள்ளிக்கு குத்பாவுக்குச் செல்வது...??? என்று. சரி...!!! ஏதோ ஒரு பள்ளிக்குச் சென்று குத்பாவை தொழுவோம் என்று ஒரு பள்ளிக்குச் சென்றேன்.
அங்கே தொழ ஆயத்தமாகும் போது ஒரு பயம்...நாம் இந்தப் பள்ளியினர் மாதிரி தொழாவிட்டால் அல்லது இவர்கள் மாதிரி உடை அணியாவிட்டால் அல்லது இவர்களது கொள்கையில் இல்லாது விட்டால் சண்டைக்கு வருவார்களோ என்று.
அடப்பாவிகளா....!!!! நமக்குல் ஏன்தான் இத்தனை பிரிவுகள்...??? ஆளுக்கொரு கொள்கை, ஆளுக்கொரு பள்ளி, ஆளுக்கொரு ஆடைக் கலாச்சாரம், ஆளுக்கொரு வணக்க வழிபாட்டு முறை மற்றும் ஆளுக்கொரு இஸ்லாத்தை பின்பற்றிக் கொண்டு இப்படி சிதைந்து கிடக்குறோமே...!!! சிந்திக்க மாட்டீர்களா...??? ஒற்றுமைப்பட மாட்டீர்கள....???
நமக்குல் ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரிவினைவாதம் இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாட்டில் பெரும்பான்மையினராக வாழும் பௌத்த இனவாத குழுக்களுக்கு அவர்களது தான்தோண்றித் தனங்களை அரங்கேற்ற இலகுவாக இருக்குமல்லவா...??? இதனை ஏன் நம் முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்கின்றார்கள் இல்லை.
0 comments :
Post a Comment