மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு கழகத்தின் தலைவரும் கல்முனை மாநகர சபையின் உறுப்பினருமான எம்.எஸ்.உமர் அலி தலைமையில் இன்று (15-07-2014) மருதமுனை மசூர்மௌனா விளையாட்டுத் தொகுதி திறந்த வெளியில் நடைபெற்றது.
இதில் மருதமுனை அந்-நஹ்லா அறபிக்கல்லூரி அதிபர் அல்-ஹாபில் மௌலவி எஸ்.எம்.நியாஸ் அவர்களின் இப்தார் விஷேட சொற்பொழிவு இடம்பெற்றது. கழகத்தின் பொதுச் செயலாளர் ஏ.எம்.இப்றாகீம் அவர்களின் வழிநடாத்தலில் கழக உறுப்பினர்கள் இந்த இப்தாருக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
இந்த இப்தார் நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள் அதிபர்கள். ஆசிரியர்கள். வைத்தியர்கள், மற்றும் விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பெரும் தொகையானோர் கலந்து கொண்டனர்.

.jpg)
.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*)
0 comments :
Post a Comment