வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக வட மாகாண சபையின் பிரதம செயலாளர் விஜயலக்ஷ்மி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த அடிப்படை உரிமை மனுவினை இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் மூலம் தீ்ர்த்துக் கொள்ள முடியும் என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இதன்போது கூறியுள்ளார்.
மாகாண சபையின் பிரதம செயலாளரின் அதிகாரங்கள் மற்றும் நியமனம் தொடர்பிலான சட்டப் பின்புலம் தொடர்பில் நீதிமன்றத்தினால் இரு தரப்பினருக்கும் கருத்துக்களை எடுத்துகூறி தீர்ப்பினை வழங்குவதாகவும் பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment