திருமண வீடுகளில் நாம் எல்லோரும் கணக்கில் எடுக்காத ஒரு பொருட்டாக கருதாத விடயம்

மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்

திருமண வீடுகளில் நாம் எல்லோரும் கணக்கில் எடுக்காத, ஒரு பொருட்டாக கருதாத விடயம் ஒன்று உள்ளது அது என்னவென்று தெரியுமா உங்களுக்கு....???

ஆமாம்...!!! அதுதான் திருமண நாளில் எல்லோரையும் புகைப்படம் எடுக்க அனுமதிப்பது. நீங்கள் நன்றாகப் பார்த்திருப்பீர்கள் மணமகன் - மணமகள் இருவரும் மணப்பந்தலில் அமர்ந்திருக்கும் போது கண்டநிண்டவர்கள் எல்லாம் அவர்களது தொலைபேசிகள் மூலமாக புகைப்படம் எடுக்கத் துவங்கி விடுவார்கள்.

இந்தப் பதிவின் மூலமாக நான் திருமணத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது கூடுமா கூடாதா...??? மணப்பந்தல் அமைப்பது சரியா தவறா..?? என்று நான் விவாதம் பண்ணவோ, தர்க்கம் பண்ணவோ வரவில்லை மாறாக நமது ஊர்களில் நடைமுறையில் இருக்கும் திருமண நிகழ்வுகளில் இடம்பெறும் இத்தகைய அனாச்சாரத்தையே சுட்டிக் காட்ட முனைகின்றேன்.

திருமண வீடகளில் நடைபெறும் இத்தகைய நிகழ்வு உண்மையில் நல்லதொரு ஆரோக்கியமான விடயமாக எனக்குத் தெரியவில்லை. இது நமது திருமண வீடுகளில் கண்டிப்பாக நாம் அவதானிக்க வேண்டிய ஒரு விடயம்.

இன்றைய நவீன காலகட்டத்தில் புகைப்படங்களை எவ்வாறெல்லாம் வடிவமைக்க முடியுமோ அவ்வாறெல்லாம் நாம் விரும்பிய படி வடிமைக்கலாம், அதனை அசுத்தப்படுத்தலாம், ஆபாசப்படுத்தலாம், போலி முகங்களை நமது புகைப்படத்தில் பொருத்தலாம்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

திருமண வீடுகளில் பெண் வீட்டார்களோ !! அல்லது மாப்பிள்ளை வீட்டார்களோ இது பற்றி கொஞ்சம் கூட அவதானிப்பது இல்லை. யாராவது புகைப்படம் எடுத்தால் கூட அதனை ஒரு பொருட்டாக கருதுவதில்லை.

இப்படி எல்லோரும் கண்ட நிண்ட படி பற் பல கோணங்களில் மணப்பெண்னையும், மணமகனையும் படம் பிடித்து அதனை ரசிக்கிறார்கள், மேலும் ஒரு சிலர் மணப்பெண்னை மாத்திரம் படம்பிடித்து அதனை ரசிக்கிறார்கள், அவர்களது நண்பர்களோடு கூடி இருந்து அந்த மணப்பெண்னின் அழகை வர்ணிக்கிறார்கள்.

இது பாரதுாரமான விளைவுகள் ஏற்பட வழிசமைக்குமல்லவா...??? சிந்தியுங்கள் நண்பர்களே...!!!!

ஆகவே...!!! உங்கள் திருமண வீடுகளில் நம்பிக்கைக்கு உரியவர்களுக்கு, உங்கள் உறவுகளுக்கு மாத்திரம் உங்கள் வீட்டு திருமண நிகழ்வை வீடியோ எடுப்பதற்கோ அல்லது புகைப்படம் எடுப்பதற்கோ அனுமதியுங்கள். கண்டநிண்டவர்கள் எல்லோரும் புகைப்படம் எடுக்க அனுமதிக்காதீர்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :