பழுலுல்லாஹ் பர்ஹான்-
மனிதவள அபிவிருத்திக்கான சர்வதேச அமைப்புடன் இணைந்து ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் மற்றும் அல் மனார் நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் றமழான் மாத நோன்பை முன்னிட்டு இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் 6000 பேருக்கு உலருணவுப் பொதி வழங்கும் திட்டத்தில் காத்தான்குடி கதீப்மார்,இமாம்கள்; சம்மேளனம் விடுத்த வேண்டுகோளின் பேரில் கதீப்மார்,பேஷ் இமாம்கள்,முஅத்தின்கள்,முஅல்லிம்கள் அடங்கிய 300 பேருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 15-07-2014 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி அல் மனார் அறிவியற் கல்லூரியின் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
காத்தான்குடி கதீப்மார்,இமாம்கள்; சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி)தலைமையில இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக சவூதி அரேபிய நாட்டின் றியாத் நகரத்தைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அபூ சஹி கலந்து கொண்டார்.
இதன் போது கதீப்மார்,இமாம்கள்,முஅத்தின்கள்,முஅல்லிம்கள் அடங்கிய 300 பேருக்கு உலருணவுப் பொதிகள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு அறபு மொழியில் விஷேட உரையை ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி அமீன் பலாஹி நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெப்பை (பலாஹி), மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் சமூக சேவையாளர் கே.எம்.எம்.கலீல் ஹாஜியார் உட்பட உலமாக்கள் பலர் கலந்து கொண்டனர்.
குறித்த ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனம் இலங்கையில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)




0 comments :
Post a Comment