மின்சாரசபைக்கு ஊழியர்களை இணைத்துக் கொள்வதில் நேர்முகத் தேர்வு மேற்கொள்ளப்படாமல் முறைகேடான வகையில் ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதை தடுத்து உரிய முறையில் நேர்முகத் தேர்வுகளை நடத்தி ஊழியர்களை இணைத்துக்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை யின் இணைந்த தொழிற்சங்க முன்னணியின் செயற்குழு உறுப்பினர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.
அரசியல் தலையீட்டின் காரணமாக இல ங்கை மின்சார சபையின் பதவிகளுக்கு ஊழி யர்களை மேன் பவர் கம்பனிகளூடாக சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கையொன்று அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுகளின் மூலமாக ஊழியர் தெரிவுகள் இடம்பெறுவதில்லை. முறையற்ற விதத்தில் அரசியல்வாதிகளால் தரப்படும் பெயர்ப்பட்டியல் மூலமே ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டி னார்.
அண்மையில் இம்முன்னணியால் கொழு ம்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப் பில் கலந்துகொண்டு இலங்கை மின்சார சபை யில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தட்டெழுத்து வேலைகள், மின்சார கோபு ரம் ஏறும் வேலைகள் போன்றவற்றுக்கு படித்துவிட்டு வீட்டிலிருக்கும் இளைஞர்கள் குறித்த அரசியல்வாதிகளால் வழங்கப்படும் பெயர்ப்பட்டியல் மூலமாக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். அவர்களுக்கு ஊழி யர் சேமலாப நிதி உள்ளிட்ட எவ்வித உரித்துக்களும் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு விபத்து உள்ளிட்ட அனர்த்தங்கள் நேர்ந்தாலும் காப்புறுதியும் செலுத்தப்படுவதில்லை. எனவே தொழில் அமைச்சராக இருந்து தொழிலாளர் தொடர்பிலான ஒழு ங்குவிதிகளை கொண்டு வந்த ஒருவர் நாட்டு க்கே தலைவராகியிருக்கும், நிலையில் இவ்வாறான அடிமை செயற்பாடுகள் நடை பெறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.
.jpg)
0 comments :
Post a Comment