அரசசார்பற்ற நிறுவனங்களுக்கென புதிய சட்டம்

ரசசார்பற்ற நிறுவனங்களுக்கென புதிய சட்டமூலமொன்றை தயாரித்து இவ்வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் இயங்கும் அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் தாமாகவே பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசசார்பற்ற நிறுவனங்கள் 1412, இச்செயலகத்தில் ஏற்கெனவே பதிவுகளை மேற்கொண்டுள்ளன.

இச்செயலகத்தினால் அனுமதி அளிக்கப்பட்டால் மாத்திரமே வருடாந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் தங்களுடைய நோக்கங்களுக்கு அப்பால் செல்வதாகவும் அந்த நிறுவனங்களினால் ஊடகவியலாளர் மாநாடுகளையோ அல்லது கருத்தரங்குகளையோ நடத்த முடியாது என்று கடந்த திங்கட்கிழமை இச்செயலகம் சுற்றறிக்கையின் ஊடாக சகல அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அறிவித்திருந்தது. 

இதனை அடுத்து அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சமன் திஸாநாயக்க இவ்வறிப்பை விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :