அஷ்ரப் ஏ சமட்-
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) கொழும்பில் நடத்திய பெருநாள் திடல் தொழுகை.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக நாடு முழுவதும் சுமார் 65 க்கும் மேற்பட்ட இடங்களில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை நடத்தப்பட்டது.
கொழும்பில் - மாளிகாகந்தையில் அமைந்துள்ள வைட் பார்க் மைதானத்தில் பெருநாள் திடல் தொழுகை நடை பெற்றது. ஆண்கள் , பெண்கள், சிறுவர்கள் உட்பட ஆயிரக் கணக்கானோர் இதில் கலந்து கொண்டார்கள்
ஜமாத்தின் துணை செயலாளர் சகோதரர் ரஸ்மின் MISc அவர்கள் “இனவாதம் ஒழிய இஸ்லாமே தீர்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் ஏற்பாடு செய்திருந்த புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று (29-07-2014) காலை 6.20 மணிக்கு மருதமுனை கடற்கரை திறந்த வெளியரங்கில் இடம் பெற்றது. இதில் அஷ்யெக் எம்.எல். முபாறக் மதணி தொழுகை நடாத்தி பின்னர் பிரசங்கம் செய்தார்,
எஸ்.எம்.எம்.றம்ஸான்-கல்முனை
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு கல்முனைப் பிரதேசத்தில் பொருநாள் தொழுகை பள்ளி வாசல்களிலும் திறந்த வெளிகளிலும் இடம்பெற்றது.
நிந்தவூரில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை
சுலைமான் றாபி-
நிந்தவூர் தௌஹீத் ஜமாத்தினரின் ஏற்பாட்டில் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று (29.07.2014) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை மைதானத்தில் காலை 6.35 மணியளவில் நடைபெற்றது.பெருநாள் தொழுகையினைத் தொடர்ந்து மௌலவி எம்.ஐ.எம்.ஹிதாயதுல்லாஹ் அவர்களினால் "முஸ்லிம்களின் ஒற்றுமை" எனும் தலைப்பின் கீழ் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது.
இந்த பெருநாள் தொழுகையில் பெருந்திரழான ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் கலந்துகொண்டனர்.
நிந்தவூர் தௌஹீத் ஜமாத்தினரின் ஏற்பாட்டில் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று (29.07.2014) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை மைதானத்தில் காலை 6.35 மணியளவில் நடைபெற்றது.பெருநாள் தொழுகையினைத் தொடர்ந்து மௌலவி எம்.ஐ.எம்.ஹிதாயதுல்லாஹ் அவர்களினால் "முஸ்லிம்களின் ஒற்றுமை" எனும் தலைப்பின் கீழ் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது.
இந்த பெருநாள் தொழுகையில் பெருந்திரழான ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் கலந்துகொண்டனர்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சம்மாந்துறைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித நோன்புப் பெருநாள் திடல் தொழுகை இன்று 29.07.2014 காலை 6.30 மணியளவில் சம்மாந்துறை அம்பாறை பிரதான வீதியிலுள்ள அஸ்றபா வட்டை திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்!
இப் பொருநாள் தொழுகையில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருநாள் தொழுகையும் குதுபாவும் சகோதரர் அப்துல் ஜப்பார் BA அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் மற்றும் ஹூதா பள்ளிவாயல் இணைந்து ஏற்பாடு செய்த புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று செவ்வாய் கிழமை (29) காலை 6.30 மணிக்கு கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் இடம்பெற்றது.
ஏ.ஜி.ஏ.கபூர்,அக்கரைப்பற்று.
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு நேற்று (29.07.2014) செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாயலில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை இடம் பெற்றது. இப் பெருநாள் தொழுகையில் ஏராளமானோர்; கலந்து கொண்டனர்.
அஸ்மி கபூர்-
மாளிகாவத்தை மைதானத்தில் பெருநாள் தொழுகை..
த.நவோஜ்-
நோன்புப் பெருநாளை முன்னிட்டு செவ்வாய்கிழமை கல்குடா ஜம்மியதுல் தவ்வதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்த பெருநாள் தொழுகை செம்மண்னோடை சாட்டோ விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)




.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment