வடமேல் மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களை அமைச்சர் அதாஉல்லா ஆரம்பித்து வைத்தார்- படங்கள்

ஜே.எம்.வஸீர்-

ள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கீழ் இயங்கும் புறநெகும வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் பின்தங்கிய நிலையில் காணப்படும் 108 உள்ளுராட்சி சபைகள் தெரிவுசெய்யப்பட்டு அச்சபைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகளை மேம்படுத்தி அதனூடாக அச்சபைகளை சிறிய அழகிய நகரங்களாக வடிவமைக்கும் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது. 

அதில் ஓர் அங்கமாக வடமேல் மாகாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை உள்ளுராட்சி மற்றும்; மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் ஆரம்பித்து வைத்தார். 

01. குளுயாப்பிட்டி பிரதேச சபைக்காக

39 மில்லியன் ரூபா பெறுமதியான கிராமிய மருத்துவ நிலையம், மற்றும்; வாசிகசாலை.

02. மாதம்ப பிரதேச சபைக்காக 
30 மில்லியன் ரூபா செலவில் பேரூந்துத் தரிப்பிடம், மற்றும்; கிராமிய மருத்துவமனை, வாசிகசாலை.

03. ரிதிகம பிரதேச சபைக்காக
37 மில்லியன் ரூபா செலவில் பேரூந்துத் தரிப்பிடம், மற்றும்; பல்தேவைக்கட்டிடம். 

04. உடுபத்தாவ பிரதேச சபைக்காக

47 மில்லியன் ரூபா செலவில் பல்தேவைக்கட்டிடம் 

இந்நிகழ்வுகளுக்கு வடமேல்மாகாண முதலமைச்சர் தயாஸ்ரீ தயாசேகர , உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் பிரதி அமைச்சர் இன்திக பண்டாரநாயக்க, குளியாப்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளர் சுசந்த கெட்டவளகெதர, மாகாண சபை உறுப்பினர் சந்தனயாப்பா, ஹலாவத்த பிரதேச சபையின் தவிசாளர் நிசந்த குமார, பிரதி அமைச்சர் நியூமல் பெரேரா, வடமேல் மாகாண விவசாய அமைச்சர் சனத் நிஸாந்த, ரிதிகம பிரதேச சபையின் தவிசாளர், கே.டி விமலதாச, பாராளுமன்ற உறுப்பினர் நிமல் விஜயசிங்க மற்றும் உள்ளுர் அரசியல் பிரமுகர்களும், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :