ஹஜ் கோட்டா பகிர்ந்தளிப்பில் மீள தடைக்கால உத்தரவை இம் மாதம் 23ஆம் திகதி வரை நீடிப்பு

அஷ்ரப் ஏ. சமத்-

ஜ் கோட்டா பகிர்ந்தளிப்பில் மீள தடைக்கால உத்தரவை இம் மாதம் 23ஆம் திகதி வரை நீடிப்பு. கடந்த வார விசாரணையின்போது 14ஆம் திகிதி வரை தடைக்கால உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

இவ் வழக்கு நேற்று(14) மீயுர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இவ் வழக்கு சம்பந்தமாக ஹஜ் கமிட்டியின் இணைத் தலைவரான பிரதி அமைச்சர் அப்துல் காதர் மற்றும் இவ் வழக்கிணை தாக்கல்செய்த செரண்டிப் ஹஜ் உம்ரா சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எச் முஹமட் நீதிமன்றில் பிரச்னனமாகியிருந்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதம நீதியரசர் - இப் பிரச்சினையை சம்பந்தப்பட்ட தரப்பிணர்கள் அமைசச்ர் பௌசி மற்றும் சகலரும் சந்தித்து பேச்சுவாhத்தையின் மூலம் இதனை பேசித் தீர்த்துக் கொள்ளமுடியும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

சவுதி அரேபியா இ;ம்முறையும் 2240 ஹஜ் கோட்டாக்களையே இலங்கை முஸ்லீம்களுக்காக வழங்கியுள்ளது. இதனை திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட 90 ஹஜ் முகவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டியுள்ளது. இதில் சில ஹஜ் முகவர்களுக்கு 50இ 70 எனவும் சிலருக்கு 5இ10 எனப் பகிர்ந்தளித்தனாலேயே இவ் விடயம் நீதிமன்றம் சென்றது. கடந்த 2006இ 2012இ 2013இ 2014 என நான்கு முறை ஹஜ் கோட்டா பகிர்வில் மீயுர் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகின்றது.

இங்கு கருத்து தெரிவித்த பிரதியமைசச்ர் அப்துல் காதர் என்னையும் இணைத் தலைவராக பிரதம மந்திரி நியமித்துள்ளாh.; சிரேஸ்ட அமைச்சர் பௌசி என்னுடன் ஒத்துவருவாரேயானால் நானும் தயார் இந்தப் பிரச்சினையை மிக விரைவில் தீர்த்து வைக்கமுடியும் என கருத்து தெரிவித்தார். ஆனால் பிரதியமைச்சர் ஹஜ்கோட்டாவில் தனக்கும் 50வீதம் பிரித்து தரவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

செரண்டிப் ஹஜ் முகவர்கள் தலைவர் - சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கும் அப்துல் காதருக்கும் கோட்டா பகிர்வில் பிரச்சினை இருந்து வருகின்றது. சிரேஸ்ட அமைச்சர் பௌசி அவர்கள் ஹஜ் கோட்டா பகிர்வில் முறைகேடாக நடந்துகொள்வதனாலேயே இப் பிரச்சினையை நீதிமன்றம் நாடவேண்டியுள்ளது. எனத் தெரிவித்தார்.
Fowzie alleged over Hajj quota

Chief Justice Mohan Peiris yesterday (July 14) informed the relevant parties ,who involved in the dispute of dividing Haj Pilgrims quotas, to settle the matter amicably.

The Serendib Haj and Umra Association had filed a fundamental case against the Haj Pilgrims Committee and charged the Committee has distributed the quotas in a biased manner.

The case was taken before a panel of three Supreme Court Judges yesterday.

Later the court issued an injunction over the quota distribution, and the order has been extended up to the 23rd of this month.

The Saudi Arabian government grants Haj quotas to several countries, and Sri Lanka has received quotas for 2240 persons this year.

The Haj Pilgrims Committee of the Religious Affairs Ministry is presided by Senior Minister A.H.M. Fowzie, and its co-President is Deputy Minister Abdul Cader.

This committee is responsible for the distribution of the quota among 90 agents.

Cases were filed in 2006, 2012 and 2013 as well, charging the quotas were not distributed properly but later the cases were settled amicably.

However, after the Supreme Court order, Deputy Minister Abdul Cader stated yesterday he is ready to settle the dispute in the event Minister Fowzie agrees to do so.

Serendib Haj and Umra Association President M.S.H. Mohammad also said Minister Fowzie has behaved arbitrarily in distributing Haj quotas.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :