பகல் முழுவதும் பசித்திருந்து, இரவு முழுவதும் நின்று வணங்கி பாவங்களைக் கரியாக்கி, பகமைகளை வெறுத்து உறவுகளுடன் ஒன்றிணைந்த புனித மாதம் எம்மைவிட்டுப் பிரிந்து அந்த மாதத்தின் அறுவடை நாளான ஈகைத் திருநாள் ஈத் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் இன்று பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக இன, மத வேறுபாடின்றி அந்நியோன்யமாக பழகக்கூடிய இச்சந்தர்ப்பத்தில் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இப்பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் இனங்களுக்கிடையே நல்லுறவு பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் சிறு பேரினவாதக் குழுக்கள் முஸ்லிம் - சிங்கள மக்களிடையே பிளவினை ஏற்படுத்தி நாட்டில் மீண்டும் ஒரு அமையற்ற சூழலை உருவாக்க முற்பட்டுள்ளனர். இதற்கு முஸ்லிம்கள் இடங்கொடுக்காது பொறுமை காத்து இறைவனிடம் துஆக் கேட்டு வருகின்றமையை மெச்சுகின்றேன்.
எமது நாட்டில் முஸ்லிம்களாகிய நாம் நமது மதக் கடமைகளை சுதந்திரமாக செய்வதற்கும், எமது பாதுகாப்பிற்கும், பொருளாதார விருத்திற்கும் இப்புனித நோன்புப் பெருநாளில் அனைவரும் இறைவனிடம் இருகரம் ஏந்திப் பிரார்த்திப்போமாக எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment