பைஷல் எம் இஸ்மாயில்,ஏ.எல்.றமீஸ்-
ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றோம். நாம் அனைவரும் இறைகட்டளைக்கு அடிபணிந்து நோன்பு நோற்றதன் மூலம் ஏழைகளின் கஷ்டங்களை இக்காலகட்டத்தில் நாம் அனுபவித்திருக்கிறோம். அதன் மூலம் எம்மை நாம் பக்குவப்படுத்தியிருக்கிறோம். இந்தப் பக்குவம்எமது வாழ்நாளில் தொடர வேண்டும். எனவும் இன்று உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் பேருவகையுடன்கொண்டாடும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இத்தினத்தன்று வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் விடுத்துள்ள தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவிதார். அவர் மேலும் தனது வாழ்துச் செய்தில்,
இன்றைய பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்திருந்து, குளித்துபுத்தாடையணிந்து , நறுமணம் பூசி, இன்சுவை உணவுகள் உண்டு பின்னர் பள்ளிவாசல்களிலே ஒன்று கூடி தக்பீர்முழக்கம் செய்து இறைவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தி மகிழ்வர். பள்ளிவாசல்களிலே தமது சகோதரர்களுடன்தோளோடு தோள் சேர்த்து நின்று பெருநாள் தொழுகை தொழுது, பின்னர் ஒருவரோடு ஒருவர் கட்டித் தழுவி தமதுமகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்வர்.
அதே போல், தமது உறவினர்,நண்பர்கள், அயலவர்கள் இல்லம் சென்று இவ்வாறே பெருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வர். எனவும் இன்று இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment