முஸ்லிம்கள் தமது தாய் நாட்டிலேயே அடக்கி ஒடுக்கப்படுகின்ற இக்கால கட்டத்தில் சமூக இருப்பை ஸ்திரப்படுத்துவதற்கு அனைவரும் ஒரே தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான
தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
இன்று உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் எமது முஸ்லிம் உம்மத் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற மிகவும் இக்கட்டான ஒரு காலகட்டத்தில் இப்பெருநாளை கொண்டாட வேண்டியுள்ளது.
குறிப்பாக எமது நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் இருப்பு, பாதுகாப்பு, சமய வழிபாட்டுச் சுதந்திரம் என்பன கேள்விக்குறியாகியுள்ள. இந்த நாட்டு முஸ்லிம்கள் இன்று பேரினவாத சக்திகளினால் கலாசார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தாக்கப்பட்டு வருகின்றனர்.
தமது சொந்த நாட்டிலேயே பேரின சக்திகளினால் எல்லை மீறி முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்ற சூழ்நிலையிலும் கூட நாம் இஸ்லாம் மார்க்கம் காட்டிய சகிப்புத்ன்மையை கடைப்பிடித்து வருகின்றோம்..
ஆனால் இத்தகைய அடக்குமுறைகளில் இருந்து நமது சமூகத்தை விடுவித்து தாய் மண்ணில் நமது சமூகத்தினதும் மார்க்க கட்டமைப்பினதும் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டு முழுமையான சுதந்திரத்துடன் தலைநிமிர்ந்து வாழ்வதற்காக நமக்கிருக்கின்ற ஒரேயொரு அரசியல் இயக்கத்தை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயற்பட வேண்டியது இத்தருணத்தில் ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை என்பதை வலியுறுத்துவதுடன் அதற்காக அனைத்து பேதங்களையும் மறந்து சமூகம் என்கின்ற ஒரே கொடியின் கீழ் அணி திரள வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கின்றேன்.
இத்தகைய உயரிய இலக்கினை அடைந்து கொள்வதற்காக ரமழான் மாதத்தில் சமூக, வாழ்வியல் கட்டுக்கோப்புகள் குறித்து நாம் கற்றுக் கொண்ட படிப்பினைகளும் நற்பண்புகளும் நமக்கு உறுதுணையாக இருக்க வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். ஈத்முபாறக்!
.jpg)
0 comments :
Post a Comment