மொனராகல, கும்புக்கன சுபாக்கியா விசேட தேவையுள்ளவர்களுக்கான பாடசாலையில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஆசிரியர்கள் 9 பேர் தமக்கு மீண்டும் சேவையைப் பெற்றுத் தருமாறு கோரி ஊவா மாகாண சபைக்கு முன்னால் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மாகாண கல்வி அமைச்சின் கீழுள்ள விசேட கல்விப் பிரிவின் வழிகாட்டலில் இந்தப் பாடசாலை இயங்கி வருகின்றது. இப்பாடசாலையில் கடமையாற்றிய முன்னாள் அதிபர் ஒருவர் மீது சுமத்தப்பட்டிருந்த சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், ஆசிரியர்களிடம் பாலியல் இலஞ்சம் கோரல் ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு பொலிஸில் சாட்சியம் கூறியதற்காக இவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்திலுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது பிரச்சினைக்குத் தீர்வு எட்டும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லையென இவ்வாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :
Post a Comment