த.நவோஜ்-
நீதி அமைச்சின் கீழ் இயங்கும் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவினால் மக்களின் பிரச்சினைகளுக்கு இலகுவில் தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் மத்தியஸ்த சபை அமைத்து வருகின்றது.
அந்த வகையில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கான 221வது மத்தியஸ்த சபை ஆணைக்குழுவினால் அமைக்கப்பட்டது. இதற்கு இருபத்தேழு பேரை நியமித்து அவர்களுக்கான நியமனக் கடிதங்களை மத்தியஸ்த சபையின் ஆணைக்குழுவின் தவிசாளர் ஹெக்டர் யாபா (HECTOR YAPA) வழங்கியுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட தவிசாளர், உதவித் தவிசாளர் உட்பட இருபத்தேழு பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தவிசாளர் செல்வி.சீ.யோகேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திருமதி.ரீ.தினேஸ் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.றஹீம், கணக்காளர் செல்வி.ஏ.டிலானி, கல்குடா தபால் நிலைய தபால் அதிபர் எம்.அற்புதன் ஆகியோர் கலந்து கொண்டு புதிதாக தெரிவு செய்யப்பட்ட மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.
.jpg)



0 comments :
Post a Comment